தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட நடிகரும் இயக்குனருமான தம்பி. ராமையா தெரிவித்த தகவல் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை பகிர்ந்து தம்பி ராமையா கருத்தை கேட்டபோது, மிகவும் திறமையான இளைஞர், IPS பாஸ் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது அதை செய்து வேறு மாநிலத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றி மிஸ்டர் கிளீன் என்ற பட்டதை பெற்றவர் அண்ணாமலை.
அதோடு நில்லாமல் ஒரு கட்சியில் இணைந்த சில மாதங்களில் அக்கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என அண்ணாமலையை மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார் தம்பி ராமையா, வழக்கமாக தமிழ் திரை உலகை சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களையோ அதன் நிர்வாகிகளையோ விமர்சனம் செய்வதுதான் காலம் காலமாக அரங்கேறி வருவது வழக்கம்.
ஆனால் தற்போது பல திரை உலகை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் அண்ணாமலைபோன்றவர்கள் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்புகள் அமைந்து இருப்பதால் பலரும் தேசியத்தின் பக்கம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அண்ணாமலை குறித்து தம்பி ராமையா தெரிவித்த கருத்து பாஜகவினர் இடையே மகிழ்ச்சியையும் அதே சமயம் பாஜகவிற்கு எதிர் நிலை அரசியல் செய்பவர்கள் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. தம்பி ராமையா பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.