24 special

ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து மோடி சொன்ன அந்த தகவல்.....!

modi, rn ravi
modi, rn ravi

தமிழகத்தில் தற்பொழுது பாஜகவின் செல்வாக்கு என்பது சற்று உயர்ந்து கொண்டே செல்கிறது அதனால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நிச்சயமாக பாஜக ஒரு குறிப்பிட்ட இடத்தை தமிழகத்தில் பெற்றிருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழகத்தில் பிரதமர் மோடியே நேரடியாக வேட்பாளராக இறங்கலாம் என்றும் அதிலும் குறிப்பாக ராமேஸ்வரத்தில் அவர் வேட்பாளராக போட்டியிடலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்ற நிலையில் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த வருடமே தமிழகத்திற்கு அதிக முறை வருகை புரிந்த பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அடுத்த தினமே ஜனவரி இரண்டாவது தினமே தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்து சுமார்.ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையம் நிலையத்தை திறந்து வைத்தார்.


மேலும் 20 ஆயிரத்து 140 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பல்வேறு துறைகளில் தொடங்கி வைத்தவர் பல பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். அதாவது திருச்சி என் ஐ டி யில் 41 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர்கள் விடுதி, பல்வேறு ரயில் பாதைகள் மின்மயமாக்கம், 5 சாலை திட்டங்கள் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியம், இரட்டை ரயில் பாதை, இயற்கை எரிவாயு திட்டம் போன்ற பல திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார். இப்படி பிரதமர் மோடி அன்று திறந்து வைக்கப்பட்ட பல திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடைவதுடன் ஏராளமான வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதாவது நேற்று மாலை 4:50 மணிக்கு சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு வந்தடைந்து பிறகு நான்கு சக்கர வாகனம் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார். 

சாலை மார்க்கமாக பிரதமர் வாழும் வழி முழுக்க அவரை வரவேற்கும் ஏற்பாடுகள் தமிழக பாஜக சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகல வரவேற்பு அழிக்கப்பட்டது... இதனையடுத்து நேரு உள் விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்று அந்த விளையாட்டை தொடங்கி வைத்துவிட்டு பிறகு இரவு 7 45 மணியளவில் நான்கு சக்கர வாகனம் மூலமாகவே ஆளுநர் மாளிகைக்கு வரும் பிரதமர் அங்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் மத்தியில் துறை அமைச்சர் அமைச்சவை சந்தித்து உரையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாஜகவின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்த தகவல் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் பாஜக நிர்வாகிகள் மட்டுமின்றி 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமைக்க உள்ள மற்ற சில முக்கிய கட்சியின் தலைவர்களும் பிரதமரை சந்தித்து ஆலோசித்துள்ளார். மேலும் இனி தமிழகத்திற்கு அடிக்கடி வருவேன்! தமிழகத்தில் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, இனி தமிழ்நாடு நம் கையை விட்டு போக கூடாது என அண்ணாமலையிடம் பிரதமர் கூறியதாகவும் அவருடன் நிர்வாகிகள் பலர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.