
ஒரு திருமணம் என்றாலே அதை நடத்துவதற்குள் போதும் போதும் என்ற கலைத்து விடும் அளவிற்கான வேலைகளும் செலவுகளும் இருக்கும் எதிர்பாராத செலவுகள் எதிர்பார்த்த செலவுகள் கூட மிகப் பெரிய செலவில் கொண்டு போய் விடும். அந்த வகையில் மண்டபம் பார்ப்பது, சமையலுக்கு சொல்வது, மேடை அலங்காரம், பந்தல், பத்திரிக்கை,, போக்குவரத்து செலவு, சீர் வரிசைகள் என சாதாரணமாக ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் 5 லட்சம் ஆவது தேவைபடுகிறது. இந்த திருமண செலவு ஒரு முக்கியமான செலவை நாம் விட்டுவிட்டோம் அது தான் ஆடை செலவு அதாவது குடும்பத்திற்கும் மணப்பெண் மற்றும் ஆணிற்கு ஆடை எடுத்து முடிப்பதற்கு பல நாட்களாகும் திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கும் வீடுகளைப் பார்த்தால் எப்பொழுதுமே ஷாப்பிங் செய்து கொண்டே இருப்பார்கள், அதோடு பெரும்பாலான திருமணங்களுக்கு அதிக அளவில் தற்போது செலவழிக்கப்படுவது ஆடைக்கு மட்டுமே ஏனென்றால் நிச்சயதார்த்தத்திற்கு ஒரு புடவை கல்யாணத்தன்று தாலி கட்டும் பொழுது ஒரு புடவை அதற்குப் பிறகு ஒரு புடவை மாலையில் ரிசப்ஷனிருக்கு மற்றுமொரு ஆடை என பல ஆடைகள் மற்றும் விதவிதமான ஸ்டைல்களில் எடுக்கும் விருப்பத்தில் கல்யாணப் பெண் தயாராகி இருப்பார்.
அவரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் வருங்கால கணவருக்கு அதோ கதி தான் என்பதால் பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றும் முடிவை எடுத்திருப்பார் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார். அதோடு தற்போது நடைபெறும் கல்யாணங்களில் ஆடைச் செலவுகள் உடனே மேக்கப்பிற்கு தனி செலவு, மெஹந்திக்கு தனி செலவு, பேசியல், ஹேர் கட் திருமணமான பிறகு தங்குவதற்கு ஆடைகள் வாங்குவதற்கான தனி செலவு என மணப்பெண்ணிற்கென்று ஒரு பெரிய திருமண செலவு பட்டியல் இருக்கும். இந்த பட்டியலில் மிக முக்கியமான ஒன்றை தற்போது விட்டு விட்டாச்சு அதுதான் கல்யாண புடவையின் பிளவுஸ் செலவு! தற்போதெல்லம் கல்யாண புடவையாக எடுக்கப்படும் ஒரு புடவையின் பிளவுஸ்ஸிருக்கே அதிக அளவு செலவழிக்கப்படுகிறது. அந்த பிளவுஸிற்கு ஆரீ வொர்க் இல்லாமல் தைக்கப்பட்டால் அந்த பெண்தான் கல்யாணம் பெண்ணா என்று பலரும் சந்தேகத்தில் அமர்ந்திருப்பார்கள், அந்த அளவிற்கு திருமண பெண் என்றாலும் டென் வீட்டில் முக்கிய நபர்கள் மாப்பிள்ளை வீட்டில் முக்கிய நபர்கள் என அனைவரும் தற்போது ஆரி ஒர்க் நிறைந்த பிளவுசை அணிவதை தங்களது பழக்கமாக்கிக் கொண்டனர்.
சரி ஆரி ஒர்க் தானே போற்றலாம் என்று அந்த ஆரி ஒர்க் பற்றி தெரியாத ஒரு ஆண் இதற்கு சரி என்று கூறிவிட்டால் அங்குதான் ஆரம்பிக்கிறது அவரது வாலட் காலியாகும் நேரம்!! ஏனென்றால் வாங்கப்படும் புடவையின் விலை எதுவோ அதில் பாதியாவது ஆரி ஒர்க் பிளவுஸ்ஸின் விலை இருந்து விடும்! அதான் 25 ஆயிரம் 30 ஆயிரம் 40 ஆயிரம் என திருமண பட்டு புடவைகளை வாங்கும் மணப்பெண்கள் அதற்கான பிளவுஸில் ஆரி ஒர்க் போடுவதற்கு மட்டுமே கிட்டதட்ட பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்கிறார். சரி கல்யாணம் பெண் தான் இது போன்ற செலவை செய்கிறாள் என்றால் அவர்களது நெருங்கிய உறவினர்கள் அக்கா தங்கை அம்மா அத்தை போன்றவர்களும் கம்மியான விலையில் புடவை எடுத்தால் கூட அதாவது ₹5000-க்கு புடவை எடுத்தால் கூட அதற்கான ஆரி ஒர்க் பிளவுஸ்ஸிற்கு குறைந்தபட்சம் ₹2000 முதல் 3000 ரூபாயை செலவு செய்கிறார்கள். இப்படி திருமணச் செலவுகளில் மணப்பெண்ணிற்கான செலவு மட்டும் நீண்டு கொண்டு செல்கின்ற காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆரி வொர்க் குறித்த ஒரு ரீலஸ் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில் ஒரு அம்மா தன் மகளிடம் ஏமா இப்படி அவசரப்பட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட உன் கல்யாணத்துக்காக நான் என்னென்ன கனவு கண்டு வைத்திருந்தேன் உன் கல்யாணத்துல போடணும்ன்றதுக்காக 6 ஆயிரம் ரூபாய் செலவழிச்சு ஒரு ஆரீ ஒர்க்ல பிளவுஸ் எல்லாம் தைச்சு வச்சிருந்தேன், எல்லார் முன்னாடி கெத்தா போடலாம்னு இருந்தேன் ஆனா நீ இப்படி ஓடி போயிட்ட என்று வேதனை உடன் கூறும் தாய்! இதை கேட்டா அவரது மகன் பொண்ணு ஓடிப்போனது முக்கியம் இல்ல ஆரீ பிளவுஸ் வேஸ்டா போச்சு என்றுதான் முக்கியமா என்று கேட்க ஆமாண்டா எந்த பாக்கியும் இல்லாம ஃபுல் தையல் கூலியை கொடுத்துட்டேன் என கூறுகிறார், என் கல்யாணத்துக்கும் இது மாதிரி ஏதாவது பண்ணி வச்சிருக்கியா என்று தன் மகன் கேட்க ஏன்டா கேட்கிற என அம்மாவும் கேட்க அடுத்த வாரம் நான் ஓடிப்போக போறேன் அதான் கேட்டேன் என்று அவரது மகன் கூறிவிட்டு சென்ற ரீலீஸ் வீடியோ தற்போதைய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.