24 special

கே எஸ் அழகிரிக்கு வேட்டு வைத்த ஜோதிமணி!

jothimani, ks alagiri
jothimani, ks alagiri

2019 இல் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே எஸ் அழகிரி பொறுப்பேற்கப்பட்டார். 2022 ஜனவரியில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது இருப்பினும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைகள் நீடித்துக் கொண்டே சென்றதால் கே எஸ் அழகிரி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவே இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது திடீரென்று கே எஸ் அழகிரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு செல்வப் பெருந்தகை பொறுப்பேற்கப்பட்டுள்ளார். இப்படி திடீரென தேசிய காங்கிரஸ் தலைமை இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என பல தரப்பிலிருந்து பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகிற நிலையில் தற்போது மற்றும் ஒரு அதிர்ச்சி பெற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 


நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகத்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வர உள்ளதாக இருந்ததை அடுத்து அந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள்  குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் தலைமையில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜூம் மீட்டிங் நடந்துள்ளது. அதில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கார்கே தலைமையில் நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கான செலவுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூற அதற்கு கே எஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டியிடம் போதிய அளவில் நிதி இல்லை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிதி கொடுத்தால் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்காமல் அஜய் குமார் தலா 15 லட்சம் ரூபாயை தமிழக காங்கிரஸ் எம்பிகள் கொடுத்தால் பிரச்சார ஏற்பாடுகள் செய்வதற்கு போதிய அளவிலான நிதி கிடைக்கும் என்று கூறியுள்ளார். இந்த யோசனையை அனைத்து எம்பிகளும் ஏற்றுக் கொண்டதை அடுத்து இரண்டரை கோடி ரூபாய் செலவு இந்த பிரச்சாரத்தை யார் நடத்த போகிறார் என்ற கேள்வியை கரூர் எம்பி ஜோதிமணி முன்வைக்க கே எஸ் அழகிரி உடனடியாக தான் கவனித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

கே எஸ் அழகிரியின் இந்த பதிலை கேட்டதும் ஜோதிமணி கடுப்பாகி தமிழக காங்கிரஸ் கமிட்டி நடத்த வேண்டிய கூட்டத்தை எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் பணத்தைப் பெற்று பிரச்சாரத்தை நடத்துவதற்கு மட்டும் ஏன் கூட்டத்தை நடத்த மட்டும் கே எஸ் அழகிரி முன்வருகிறார் என கேள்வியை முன்வைத்து கே எஸ் அழகிரியின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் கே எஸ் அழகிரி தான்தான் இந்த பிரச்சார கூட்டத்தை ஏற்பாடு செய்வேன் என்று கூற ஜோதிமணி மற்றும் அழகிரிக்கு இடையே வாக்குவாதம் முண்டது இந்த வாக்குவாதத்தில் ஜோதிமணி எம்பி கே எஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்கப்பட்டதிலிருந்து வரவு செலவு கணக்குகளில் வெளிப்படை தன்மை இல்லை என்று கூற, கே எஸ் அழகிரி ஜோதி மணியை ஓருமையில் பேசி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து கடந்த தேர்தல் செலவிற்காக 10 கோடி ரூபாய் ஜோதிமணி பெற்ற பொழுதும் கணக்கு காட்ட வில்லை இதுதான் வெளிபட தன்மையா என்ற கேள்வியை முன்வைத்து உனக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே உள்ள உறவு என்ன என்பதை நான் கூறட்டுமா கட்சியில் சேர்வதற்கு முன்பு இரண்டு துணிகளை மட்டும் கொண்டு வந்து விட்டு தற்போது எத்தனை சொத்துக்களை வைத்திருக்கிறார் என்று நான் கூறட்டுமா என்று கே எஸ் அழகிரி ஆவேசமாக பல கேள்விகளை முன்வைக்க ஜூம் மீட்டிங் தெரு சண்டையில் முடிந்துள்ளது. 

இதனால் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் கண்டித்து விட்டு ஜூம் மீட்டிங்கை முடிவுக்கு கொண்டு வந்தார் இருப்பினும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லி கார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு கரூர் எம்பி ஜோதிமணி மீட்டிங்கில் நடந்தவற்றையும் கே.எஸ் அழகிரி மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார் இதனை அடுத்து ராகுல் காந்தி மீட்டிங்கில் நடந்தவற்றை மற்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்களிடம் விசாரித்து கே எஸ் அழகிரியின் பதவி குறித்த நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறியுள்ளார் அது மட்டும் இன்றி இதற்கிடையில் தற்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள செல்வப் பெருந்தகையும் சில குற்றச்சாட்டுகளை கே எஸ் அழகிரி மீது வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது வெளியாகி கே எஸ் அழகிரியின் ஆதரவாளர்களே கேஎஸ் அழகிரி நடவடிக்கைகளை குறித்து கடுப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.