24 special

வெளியான மற்றுமொரு வேட்பாளர் உத்தேச பட்டியல்!

mkstalin, annamalai
mkstalin, annamalai

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான எதிர்பார்ப்புகளும் ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிற நிலையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் அதிகளவிலான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளது. ஏனென்றால் முன்பை விட வட மாநிலத்தில் தற்போது அதிக செல்வாக்கை கொண்டுள்ள பாஜக தென் மாநிலத்திலும் தனது செல்வாக்கை அதிகப்படுத்தவும் அதிக வாக்குகளை பெற்று தனது வாக்கு வங்கியை உயர்த்தவும் திட்டமிட்டது. அதன்படியே கடந்த இரண்டு ஆண்டுகளில் தென் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கானது ஏறுமுகத்தை கண்டு தமிழகத்தில் இதுவரை ஆட்சி புரிந்து வந்த திமுக அதிமுகவிற்கே அதிர்ச்சி கொடுத்து தமிழகத்தின் பிரதான கட்சியாக காங்கிரசாலே தற்போது வரை தனித்து நின்று செயல்பட முடியவில்லை ஆனால் தமிழகத்தில் பாஜக தனக்கென்று தனி செல்வாக்கே உருவாக்கியது மட்டும் இன்றி தற்போது லோக்சபா தேர்தலிலும் தனது தலைமையிலான கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இது வட மாநிலங்கள் முழுவதும் பரவ அதற்காகவே தற்பொழுது பார்க்கலாம் இது வரை இருந்து வந்த பிரதான கட்சிகளா அல்லது தற்போது செல்வாக்கை உயர்த்துள்ள பாஜக்கவா என்பது போன்ற எதிர்பார்ப்பிலும் ஆர்வத்திலும் தமிழக அரசியல் பக்கம் பல முக்கிய தலைவர்களின் பார்வை பட்டுள்ளது. 


இதனால் தமிழகத்தின் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, அதாவது திமுக, பாஜக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைகளில் தங்களது தலைமையுடன் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்து இரண்டு நாட்களாக டெல்லியில் நடைபெற்றுவதில் கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் பிரமுகர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான முக்கிய ஆலோசனைகள் மற்றும் யுத்திகள் கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது மேலும் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 இலக்கு என்ற தலைப்பில் நாட்டை உலக அளவில் பொருளாதாரத்தில் இன்னும் முன்னுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் என்ன? எந்தெந்த துறைகளில் அதிக வளர்ச்சியை இன்னும் ஏற்படுத்தலாம் என்பது குறித்த தீர்மானமும் அதோடு எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலுக்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு சிறப்பு தீர்மானமாக அயோத்தி ராமர் கோவில் குறித்த பேச்சுகளும் அங்கு முன்வைக்கப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார். 

இப்படி தமிழக அரசியலில் தேசிய அளவில் உள்ள கட்சிகள்  மற்றும் அரசியல் விமர்சகர்கள் கவனத்தை செலுத்தி உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கான உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதே அடுத்து தற்போது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக கே. என் நேரு மகன் அருண் நேரு, அதிமுக சார்பாக என் ஆர் சிவபதி, பாஜக சார்பாக சிவசுப்பிரமணியம் அல்லது பாரிவேந்தர். பொள்ளாச்சியில் திமுக சார்பில் சண்முகசுந்தரம் அதிமுக சார்பில் கிருஷ்ணகுமார் பாஜக சார்பில் வசந்த ராஜனும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையில் திமுகவின் கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியின் சார்பாக க. வெங்கடேசன், அதிமுகவில் மருத்துவர் சரவணன், பாஜகவில் ஏ ஆர் மகாலட்சுமி. ராமநாதபுரத்தில் ராஜீவ் காந்தி மற்றும் எம் எஸ் கே பவானி ராஜேந்திரன் திமுக சார்பாகவும், மணிகண்டன் மற்றும் அன்வர் ராஜா அதிமுக சார்பாகவும், தரணி ஆர் முருகன் மற்றும்  ஜிபிஎஸ் நாகேந்திரன் ஆகியோர் பாஜகவிலும், ஐயூஎம்எல் கட்சி சார்பாக நவாஸ் கனி என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதோடு திருப்பூரில் திமுகவின் கார்த்திகேயன் சிவசேனாதிபதி அல்லது சிபிஐ கட்சியை சுப்புராயன், பாஜகவை காடேஸ்வர தங்கராஜ் மற்றும் கனகசபாபதி ஆகியோரும் அதிமுகவில் சிவசாமி, சத்தியபாமா மற்றும் குணசேகரன் ஆகியோர் போட்டியிடப் படலாம் என்ற உபதேச பட்டியல்கள் தற்போது வெளியாகி பெரும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.