24 special

பொங்கல் முடிந்ததும் அடுத்த அமைச்சரவையில் கை வைக்க போகும் அறிவாலயம்!

mk stalin, ma subramaniyan
mk stalin, ma subramaniyan

2021 ஆட்சி அமைத்திருக்கும் திமுகவால் 2026 இல் ஆட்சி அமைக்குமா என்பது பெரும் கேள்வியாக அமைந்துள்ளது.  ஏனென்றால், தொடர் பின்னடைவுகளையும் அதிருப்திகளையும் மக்கள் மத்தியில் திமுக பெற்று வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதுவும் திமுக தனது ஆட்சி அமைத்த இரண்டாவது வருடத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் சில முக்கிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதும் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து திமுக அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டதும் அதற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் தற்பொழுது சிறைவாசத்தை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு திமுக அரசு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் மக்களை தவிக்க விட்டதும் சமூக வலைதளம் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் கண்டனங்களாக எழுந்தது. 


மேலும் திமுக நியமிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் நிர்வாகிக்கும் துறையிலும் அவ்வப்போது சில பிரச்சனைகள் எழுந்து வருவதும் அது குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. முதலில் ஆவின் பால் நிறுவனத்தில் இருந்த பிரச்சனையால் அதன் அமைச்சராக பொறுப்பேற்கப்பட்டிருந்த நாசர் பதவி பறிக்கப்பட்டது அதற்கு பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்கப்பட்டார். இருப்பினும் ஆவின் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் இதுவரை எழுந்த வண்ணமே உள்ளது. இதனால் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் குறிப்பாக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தமிழக அமைச்சரவையில் மற்றுமொரு மாற்றம் நிகழலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்த ஒரு துறை சார்ந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப்படுகிறதோ அந்த துறையில் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் மாற்ற படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சர் பதவி மீது கை வைக்க மேலிடம் முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. 

அதாவது கடந்த சில நாட்களாகவே மருத்துவத் துறையில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வருகிறது மேலும் தவறுதலான அறுவை சிகிச்சைகள் பல நடைபெற்று வருகிறது சிறு குழந்தைகளுக்கும் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு தவறான மருந்துகள் கொடுக்கப்படும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தாமதமாக வந்தது மட்டுமின்றி பொதுமக்களிடம் கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து அந்த வீடியோவில் வரும் பெண்ணிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி முன்வைத்த பொழுது 11 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும் அப்பொழுது மருத்துவர் அங்கு இல்லை நர்ஸ்சே தன்னை கவனித்து சிறிது நேரம் காத்திருக்கும் படி கூறினார் இவருக்கு பிறகு மிகவும் தாமதமாக வந்த மருத்துவர் தேவையில்லாமல் பேசியதோடு என் மீது கத்தினார் என்று தெரிவித்துள்ளார். இப்படி அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மருத்துவமனை தரத்தில் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்திகள் எழுந்து வருவதால் மருத்துவத்துறை சிறப்பாக கையாளப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சரை தூக்கினால் சரியாக இருக்கும் என அறிவாலயம் முடிவெடுத்து இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பொங்கல் முடிந்த கையுடன் அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்களை செய்யவும் அறிவாலய தலைமை ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.