சற்று 10 வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தால் ஆண் பெண் என இருபாலரும் பெருமளவில் பொதுவெளியில் சந்தித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டதில்லை! விடுமுறை நாட்களிலும் நண்பர்களுடன் வெளியே செல்லும் பழக்கத்தையும் பெண்கள் கொண்டதில்லை ஒருவேளை அவர்களுக்கு விருப்பமாக இருந்தாலும் கூட அவர்களது வீட்டில் பெற்றோர்கள் அனுமதி கொடுக்காமல் இருந்தனர். ஆனால் வருடங்கள் ஓட ஓட உலகம் நவீன உலகமாக தன்னை மாற்றிக் கொண்டே உள்ளது அதற்கு ஏற்றார் போல் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி இளைஞர்கள் அனைவரும் உலகம் போன போக்கில் தங்களது பழக்கம் மற்றும் வழக்கத்தை மாற்றிக் கொண்டனர். ஒரு வீட்டிற்கு ஒரே ஒரு டெலிபோன் இருந்த காலம் மாறி ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேர் கையிலும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் இருக்கும் அளவிற்கு தற்போது மக்களின் மனநிலை மாறி உள்ளது.
அதையும் தவறு என்றும் கூற முடியாது ஏனென்றால் நவீன உலகத்திற்கு ஏற்றார் போல் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது ஒரு அவசியமாக உள்ளது ஒரு வழியில் பல நன்மைகளை கொடுக்கக் கூடியதாக இருதாலும் பல பிரச்சனை மற்றும் ஆபத்துகளையும் ஒரு பக்கம் சுமந்து கொண்டே வருகிறது. நாம் பயன்படுத்தும் கைபேசி கூட பாதுகாப்பானதா என்பது தெரியாது! இப்பொழுது மொபைல் போனில் உதவியாளரை அனைத்து பேமெண்ட் மற்றும் நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் முதலில் பல சைபர் ப்ரைம் குற்றங்களும் நடைபெற்ற வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் நிலைமை வரும் சில செயல்கள் ஒவ்வொன்றும் கலாச்சார சீர்கேட்டை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்கிறது. முதலில் லூலு என்ற பெண்ணின் விவகாரம் சமூக வலைதளம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. Whatsapp மூலமே ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு தமிழகத்தின் பெண்களின் கலாச்சார சீர் அழிவிற்குள் அழைத்துச் சென்ற சம்பவம் வைரலானது.
இதனைத் தொடர்ந்து சென்னை கோயம்புத்தூர் மதுரை புதுச்சேரி என முக்கியமான நகரங்களில் நடைபெற்று வந்த ஹாப்பி ஸ்ட்ரீட் விழாவும் முறையாக நடைபெறுவதில்லை என்றும் இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் விழா என்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.இதன் வரிசையில் தற்போது கோவையில் டேட்டிங் கஃபே திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதுவரை மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் இருந்த இந்த டேட்டிங் கப்பே தற்பொழுது கோவையில் திறக்கப்பட உள்ளதாகவும் இந்த கஃபேவிற்கு வரும் ஆண் மற்றும் பெண்கள் முன்பின் தெரியாத யாருடன் வேண்டுமானாலும் நடனமாடிக் கொள்ளலாம் மற்றும் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனால் பலர் இந்த கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால் இது கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை முன்வைக்க காவல்துறையினும் இதில் தலையிட்டு இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இதனை அடுத்து அவ்விசாரணையில் டேட்டிங் காப்பே என்ற ஒரு கடை கோயம்புத்தூரில் திறக்கப்படவில்லை எனவும் இது குறித்த விளம்பரத்தை பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளதாகவும் கூறினர். மேலும் இது குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.