![mk stalin, annamalai](https://www.tnnews24air.com/storage/gallery/zkFOHLOI2YVutJtr1O3JCuqfRoAtqOM1CuVEQjdm.jpg)
தமிழகத்தில் அதிமுக திமுக என்ற இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் தேசிய அளவில் ஆட்சி அமைந்துள்ள பாஜக தமிழகத்தை தற்போது மூன்றாவது பிரதான கட்சியாக வளர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்கப்பட்டது தான் என்று தமிழக மக்களும் கட்சி நிர்வாகிகளுமே தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்கப்பட்ட சில மாதங்களிலேயே மக்கள் அனைவராலும் கவனிக்கப்பட்டார். ஏனென்றால் அந்த அளவிற்கு அவரது பேச்சுக்கள் ஒவ்வொன்றும் தமிழக செய்திகளில் எதிரோலித்தது, அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்தோடு அவர் பேசுகள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து திமுகவின் சொத்து பட்டியலை இரண்டு பாகமாக வெளியிட்டு திமுகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் பல கேள்விகளுக்கு திமுக ஆளாக்கப்பட்டது! இதனையும் தாண்டி தமிழக மக்களின் நலனுக்காக திமுக அரசு செய்ய தவறியவற்றையும், இதை செய்தோம் அதை செய்தோம் இவ்வளவு ரூபாயில் திட்டங்கள் தொடங்கப்பட்டது என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசிற்கு தனது கேள்வி கணைகளால் அவ்வப்போது இடியை இறக்கி வருகிறார் அண்ணாமலை! இதனாலே அண்ணாமலையை தமிழக மக்கள் அனைவரும் விரும்ப ஆரம்பித்தனர் அதிலும் குறிப்பாக தமிழக இளைஞர்களுக்கும் அண்ணாமலை மீது ஈர்ப்பு ஏற்பட்டதும் அறிவாலய தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அண்ணாமலை தமிழக மக்களுக்கு 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நல்ல மாற்றம் கிடைக்க வேண்டும் தமிழக முழுவதும் ஊழல் ஒழிய வேண்டும் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை மேற்கொண்டார்.
இந்த நடை பயணம் இதுவரை பாஜகவிற்கு இருந்த செல்வாக்கு அதிகமாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் அண்ணாமலை செல்லும் பொழுது அவருக்கு கொடுக்கப்படும் வரவேற்புகளும் மக்கள் அவர்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகளும் அரசின் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இதனால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நிச்சயமாக ஒரு மாறுபட்ட தேர்தலாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்களின் உறுதியாகும்! மேலும் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதமும் 20% அதிகரித்துள்ளதாக சமீபத்தில் உளவு துறை ரிபோர்ட்டும் தெரிவித்தன. இந்த நிலையில் சமீபத்தில் நாகப்பட்டினத்தில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். இதனை அடுத்து நாகை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் போலீஸ் சீருடைகளிலேயே பாஜகவை இணைந்ததற்காக பரப்பப்பட்ட பொய்யால் முதலில் இருவரும் ஆயுதப்படைப்பு மாற்றப்பட்டனர்.
ஆனால் தற்பொழுது இருவரையும் சஸ்பெண்ட் செய்ய டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்! ஆனால் இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் பாஜகவில் சேர விருப்பமுள்ளவரை சேர்க்கும் தளங்கள் நடைபெறும் பொழுது அது குறித்து தெரிந்து கொள்வதற்காக என்ன நடக்கிறது என்பதை இந்த இரு காவலர்களும் தெரிந்து கொள்வதற்காக விசாரித்ததை இருவரும் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்று பொய் தகவல் பரப்பப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்த பொழுது அண்ணாமலையின் யாத்திரையில் இரு காவல் அதிகாரிகள் பேசியது தமிழக அரசுக்கு தெரிந்து எங்கே காவல்துறையினர் அண்ணாமலையை பார்த்து வலதுசாரிகளாக ஆகிவிடுவார்களோ என பயந்து இந்த நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.