24 special

கேப்டன் விவகாரத்தில் சிக்கிய கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ்!

vijayakanth, karthi, ishwarya rajesh
vijayakanth, karthi, ishwarya rajesh

திரை உலகில் இவரைபோன்ற மனிதரை இதுவரை பார்த்ததில்லை இனிமேலும் பார்க்க முடியாது! உதவி என்று கேட்பவர்களுக்கு வாரி வழங்கி தினமும் கிட்டத்தட்ட 300 400 பேருக்கு உணவு அளித்து தன்னையும் தன் சுற்றி இருந்த அனைவரையும் சேர்த்து வளர்த்த ஒரு மனிதராக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிப்பில் நாட்டம் கொண்ட இவர் சென்னைக்கு வந்து பல சிரமங்களையும் நிராகரிப்புகளையும் தாண்டி 90களில் முக்கிய நடிகராக வளர்ந்தவர். அது மட்டும் இன்றி இரண்டாயிரத்தில் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து நடிகர் சங்கத்தை கடனிலிருந்து தூக்கி நிறுத்தியவர்! இதனை அடுத்து தேமுதிக என்ற கட்சியை நிறுவி அதற்கு தலைவராக மாறி தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு கட்சியில் இறங்கிய கேப்டன் விஜயகாந்த் பல சூழ்ச்சியின் காரணமாக தோல்விகளை சந்தித்தார்.


அதனை தொடர்ந்து இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகள் பெற்று வந்தார்.  கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகும் பொழுது அவரது ரசிகர்கள் தரப்பிலும் தொண்டர்கள் தரப்பிலும் கோவில்களில் பல பூஜைகள் அர்ச்சனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஏனென்றால் தமிழ் திரைப்படங்கள் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் தேச பற்றியும் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை குறித்தும் பளிச்சென்று ரத்தத்தில் சூடேற்றும் வகையில் கூறியவர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மீண்டும் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் காலமானார். இதனால் கடந்த வாரம் முழுவதுமே தமிழ் திரையுலகமும் தமிழக மக்களும் வருத்தத்தில் மூழ்கி இருந்தனர். இவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து சென்னை கோயம்பேட்டையே ஸ்தம்பிக்க வைத்தனர். திரை உலகை சேர்ந்த பலரும் விஜயகாந்தை காண்பதற்கு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். அதில் கூட நடிகர் விஜய் பலவகையில் எதிர்ப்புகளைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நடிகையின் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையின் திறப்பு விழாவிற்கு வந்துள்ளார், திறப்பு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அப்பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சமீபத்தில் கேப்டன் இறந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறோம் அதனால் அது குறித்த மற்றும் அதன் சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார்! மீண்டும் வேறொரு பத்திரிகையாளர்கள் தரப்பில் இதே கேள்வி கேட்கப்படும் பொழுது நான் அப்பொழுது ஊரில் இல்லை நேற்று தான் புதுச்சேரியில் இருந்து திரும்பினேன் அந்த செய்தி எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்ற வகையில் கடமைக்கு பதில் அளித்தார். 

அதே போல் நடிகர் கார்த்தியும் நியூ இயர் பார்ட்டிக்காக அயல்நாட்டுக்கு சென்றுவிட்டு கேப்டன் இறந்து 5 நாள் கழித்து வந்துவிட்டு கேப்டனுக்காக வந்தேன், வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும் என சோகமாக உருகி கூறியதும் மொத்தமாக நடிப்பு என திரையுலக விமர்சகர்கள் மூலமாக விமர்சிக்கப்படுகிறது. கேப்டன் இறந்ததை விட முக்கியமா நியூ இயர் பார்ட்டி என கார்த்தியை நோக்கி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.திரை உலகைச் சேர்ந்த பலரும் விஜயகாந்தை பார்ப்பதற்காக பல இடங்களில் இருந்து வந்தனர் சூப்பர் ஸ்டாரே வந்து பார்த்து சென்றார்! அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் விஜயகாந்தின் மறைவு குறித்த சோகங்களும் வருத்தங்களும் ஏராளமாக பதியப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டனின் இறுதிச் சடங்கிற்கும் செல்லாமல் வெளியூர் சென்றேன் என்றது, நியூ இயர் பார்ட்டிக்காகச் சென்றது அனைத்தும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.