![vijay prabhakaran, Vijayakanth](https://www.tnnews24air.com/storage/gallery/MEJ4rVYXih1fpN0SXEHOTnsZQLFmnyDrWGGJ8EVd.jpg)
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இறந்த செய்தி தான் இன்று வரை மக்களிடம் பேசப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் பல உண்மை தகவல் வெளியில் வந்த வண்ணம் உள்ளன. விஜயகாந்தின் ஆரம்ப காலத்தில் அவருடன் சினிமாவில் நடித்த பிரபலங்கள் வீடியோ மூலம் அவருடன் தொடர்புடைய பலரும் அவரை பற்றி பல விஷயங்களை பேசி வருகின்றனர். விஜயகாந்த் பெயரில் தற்போது உணவகங்களில் இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் மறைவிற்கு நேரில் வரமுடியாத பல நடிகர்களும் தற்போது நேரில் வந்து அந்நுவரும் புது சபதங்களை எடுத்து செல்கின்றனர். அந்த வகையில் அருண் விஜய் இரங்கல் தெரிவித்து விட்டு படப்பிடிப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுகளை வழங்க சத்தம் எடுத்து கொண்டார். நடிகர் காத்திக், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் தற்போது நேரில் வந்து கண்ணீர் விட்டு விஜயகாந்த் உடன் நடித்த அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதன் விஜயகாந்த் குறித்து கேள்வி கேட்ட பொழுது அதுகுறித்து கேள்வி கேட்க அது வேண்டாம் என சொன்னார். இது பேசு பொருளாக மாறியது இதனால் அவரும் இன்று நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பெயர் விஜயபிரபகாரன். விஜகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத நிலையில் இருந்தபோது விஜய பிரபகாரன் அப்பாவின் கட்சியில் வேலை செய்ய துவங்கினார். விஜயகாந்துக்கு பதில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், கொஞ்சம் பேசவும் கற்றுக்கொண்டு தொண்டர்களின் கைத்தட்டலை வாங்கினார்.விஜயகாந்த் இவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். 2019ம் வருடம் அதற்கான சில முயற்சிகளும் நடந்தது. ஆனால், அதன்பின் அதுபற்றி செய்திகள் வரவில்லை.
தற்போது விஜயகாந்த் மறைந்துவிட்ட நிலையில் விஜயபிரபாகரன் திருமணம் பற்றி பலரும் பலவிதமான செய்திகளை சொல்லி வருகிறார்கள். அந்த திருமணம் பாதியிலேயே நின்றுபோய்விட்டது. மீண்டும் நடக்காது என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது பல வருடமாக சினிமாவில் பத்திரிக்கையாளராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் மறுத்துள்ளார். கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும், விஜய பிரபாகரனுக்கும் 2019ம் வருடம் நிச்சயதார்த்தம் நடந்தது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்த திருமணத்தை நடத்த விஜயகாந்த் ஆசைப்பட்டார். ஆனால், மோடியின் தேதி கிடைக்கவில்லை.
எனவே, திருமண நாள் தள்ளிக்கொண்டே போனது. அதற்கிடையில் விஜயகாந்துக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அப்பாவுக்கு உடல்நிலை சரியானதும் திருமணம் செய்துகொள்வோம் என விஜயபிரபாகரனும் நினைத்தார். இப்படியே 4 வருடங்கள் ஓடிவிட்டது. கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என அவர் கூறினார். விஜய பிரபாகரன் தமிழ் சினிமாவில் மதுர வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் விஜயகாந்த் போல் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.