24 special

பதாகையுடன் நின்ற "நந்தினி" பாஜகவினர் செய்த தரமான சம்பவம்!

Actress nandhini
Actress nandhini

தமிழகத்தில் பாஜகவினர் அதிரடி அரசியலில் ஈடுபாடுவார்கள் என பாஜக மூத்த தலைவர்கள் பல்வேறு விவாதங்களில் தெரிவித்து வருகின்றனர், ஒரு முறை பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தம்பி எங்களை தவறாக எண்ணி விடாதே நாங்கள் களத்தில் இறங்கினால் எதிரிகள் இருக்க மாட்டார்கள் என எச்சரிக்கை கொடுத்து இருந்தார்.


அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் எங்கள் அரசியல் அதிரடியாகத்தான் இருக்கும், அடித்தால் திருப்பி அடிப்போம் என வெளிப்படையாக பத்திரிகையாளர் மன்றத்தில் தெரிவித்தார், இந்த சூழலில்தான் திண்டுகல்லில் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேருந்து நிலையத்தில் கையில் பதாகை உடன் நந்தினி அவரது சகோதரி ஆகியோர் நிற்பதாக பாஜகவினருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து உடனடியாக பாஜகவினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு நேரடியாக பேருந்து நிலையம் சென்றனர் அங்கு பாஜகவினரை பார்த்த நந்தினி AND CO ஓட்டம் எடுக்க தொடங்கிய நிலையில் அவர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர்.

இதையடுத்து நந்தினி மீது பாஜகவினர் புகார் கொடுத்தனர் இரண்டு நாட்களில் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது, வழக்கமாக நந்தினி குழுவினர் தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் பிரச்சாரம் செய்துவிட்டு பிரதமருக்கு எதிராக வாய்க்கு வந்ததை பொதுமக்கள் மத்தியில் கூறி செல்லும் நிலையில் தற்போது பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைந்த சூழலில் தமிழகத்தில் பிரதமரை எதிர்த்து போராட்டம் நடத்த இயலாத சூழல் உண்டாகி இருக்கிறது.

மது ஒழிப்பு போராளியாக முதலில் போராட்ட அரசியலை தொடங்கிய நந்தினி தற்போது முழு நேர பாஜக எதிர்ப்பு போராளியாக வலம் வந்த சூழலில் திண்டுக்கல் பாஜகவினர் முறையான பதிலடியை கொடுத்து இருக்கிறார்களாம்.