24 special

உருவாகப் போகும் மெகா கூட்டணி.... அப்போ எல்லாம் கன்பார்மா....?

pm modi, ttv dinakaran, vijay
pm modi, ttv dinakaran, vijay

நாடாளுமன்ற தேர்தலுக்கு மாதங்கள் மிகவும் குறைவாக உள்ள காரணத்தினால் ஒவ்வொரு கட்சியும் படு ஆக்டிவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் வைத்து 26 எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I என்ற கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்த்து வருகிறது. ஆனால் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களுக்கு பல நலத்திட்டங்களையும் மக்களின் எதிர்காலத்திற்கு உதவி புரியும் வகையிலான தொலைநோக்கு பார்வைகளையும் செயல்படுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாகவே கடந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக வந்தது. 


இது மக்களுக்காக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள பாஜகாவிற்கு ஒரு உத்வேகத்தை கொடுத்து வருகிறது. அதே சமயத்தில் பாஜகவின் வெற்றி காங்கிரஸின் தோல்வி ஆகும் இந்த தோல்விக்கு இவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள திமுகவில் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை குறித்து பேசிய கருத்துகளும் அவர் சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறியதுமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் திமுக தனது I.N.D.I கூட்டணியின் பிரதிநிதித்துவத்தை இழக்கலாம் அதே சமயத்தில் தமிழக முழுவதும் திமுகவிற்கு பெரும் எதிர்ப்பு அலைகளும் நிலவுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை அளித்து அதில் பாதியை கூட நிறைவேற்றாமல் மக்கள் ஒவ்வொருவரையும் ஏமாற்றியதால் அந்த வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழுக்களும் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.

மேலும் கடந்த வாரத்தில் சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னமும் சென்னை மக்கள் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இவற்றிற்கு தமிழக அரசு தரப்பில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி மிகப்பெரியதாக உள்ளது மீட்பு நடவடிக்கைகளும் சரிவர நடைபெறவில்லை நிவாரண பொருட்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை கொடுக்கப்படும் நிவாரணப் பொருட்களும் முறையானதாக இல்லை என்ற பல குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் அரசை நோக்கி முன்வைக்கப்படுகிறது.இத்தனை குற்றச்சாட்டுகள் மக்கள் முன்வைத்து வரும் அதே சமயத்தில் தான் தமிழக முதல்வர் தற்பொழுது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு 4000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்தது.இப்படி காங்கிரஸ் திமுக அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிற நிலையில் எந்த கட்சி வலுவாக இருக்கும் என்று யோசிக்கப்பட்டால் பாஜக தலைமையிலான கூட்டணி தான் என்று அடித்துக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், விஜயின் மக்கள் இயக்கம், தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி, பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சரான வைத்தியலிங்கம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டணி உருவாக திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட டிடிவி தினகரனின் பிறந்த நாளன்று டிடிவி தினகரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர்களின் பெயர்கள் அனைவரையும் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு டிடிவி தினகரனின் பிறந்த நாளுக்கெல்லாம் நடிகர் விஜய் வாழ்த்துக் கூறியது கிடையாது! தற்பொழுது நடிகர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை கசிந்துள்ள தகவலின்படி இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செல்லும் எம்பி களின் அளவு பெரிய அளவில் இருக்கும்! தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியைப் பெறும் என இப்பொழுதே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.