எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கதையாக தற்போது இந்திய பிரபல ஊடகவியலாளர் அர்ணாப் கோஸ்வாமி அமெரிக்க பேராசிரியரை கேள்வி எழுப்பியதையும் கேள்விகளால் துளைத்து எடுத்ததையும் சீனாவை சேர்ந்த அந்நாட்டின் தூதர்கள் சீன மொழியில் சப் டைட்டில் போட்டு பகிர்ந்து வருகின்றனர்.
வாஷிங்ட்டன் டிசியை சேர்ந்த அமெரிக்க பேராசிரியர் - இந்தியா செய்வது சரியில்லை. இந்தியா நல்ல நிலையை எடுக்கவேண்டும். கொடுங்கோலன் புடின் பக்கம் நிற்பது கூடாது. அமெரிக்கா பக்கம் வரவேண்டும் என இந்தியாவிற்கு அறிவுரை வழங்கினார், அப்போது குறுக்கிட்ட அர்னாப் நீங்கள் அதை சொல்கின்ற உரிமை இருக்கிறதா?
Credit - raja shankar
அமெரிக்கா எத்தனாயிரம் பேரை கொலை செய்து இருக்கிறார்கள் . லிபியாவிலே கடாபிக்கு எதிரா சின்னதா நடந்த வன்முறைய அமெரிக்கா உள்ளே புகுந்து ஒரு பத்தாண்டுகளுக்கு ஆன போரா ஆக்கிவிட்டிருச்சு. ஈராக், லிபியா, லெபனான் என எத்தினி லட்சம் பேரை அமெரிக்கா கொன்றிருக்கிறது, நீங்கள் அதை பத்தி பேசலாமா?
இந்தியா தான் ஒடுக்கப்பட்ட நாடுகளூக்கு பிரதிநிதியாக இருக்கமுடியும். அமெரிக்க ஐரோப்பிய வல்லாதிக்கத்தை எதிர்த்து பேச ஆப்பிரிக்க ஆசிய நாடுகளால் முடியாது. இந்தியா தான் அதை செய்யும் எனவும் வெளுத்து எடுத்துவிட்டார் மொத்தத்தில் அர்ணாப் அமெரிக்க பேராசிரியரை புரட்டி எடுத்த வீடியோ தற்போது நாடுகள் கடந்து கண்டங்கள் கடந்து பகிரப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் தனது கேள்வியால் மீண்டும் உலக அளவில் புகழ் பெற்று இருக்கிறார் அர்னாப். வீடியோ கீழே இணைக்கபட்டுள்ளது.