தனியார் செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறை நேற்று வெளியான RRR திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தது அதில் RRR படம் விமர்சனம்: ஆயுதம் தாங்கிய ஆங்கிலேயப் படையினை ராமாவதாரம் எடுத்தது போல ராம் சரண் வில்லும் அம்புமாக வந்து இந்துமதக் கடவுள் ராமனின் வேஷமிட்டு அம்பெய்தி வீழ்த்துவதெல்லாம் என்ன வகையான லாஜிக்.?
எந்த தரப்பை திருப்திப் படுத்த இப்படியான காட்சி? இதற்கெல்லாம் ராஜமெளலி பதில் சொல்லவேண்டும் எனவும் தலைப்பு வைத்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பும் தனியார் ஊடகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர், இந்த சூழலில் பாஜக செய்தி தொடர்பாளர் SG சூர்யா இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அது பின்வருமாறு :-
#RRR திரைப்படம் ஒரு visual spectacle. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம். கூடவே தேச பக்தியும், ஹிந்து மதமும் முன்னிருத்தப்படுகிறது. அனைவராலும் வரவேற்கப்பட்டு வசூல் சாதனைகளை தகர்த்தெரிந்து வருகிறது.
ஆனால் திராவிடியன் ஸ்டாக்குகளுக்கு ஏனோ படம் பிடிக்கவில்லையாம். ஒரு பிரபல தமிழ் செய்தி தொலைகாட்சி தனது RRR திரைப்பட விமர்சனத்தில் இவ்வாறு எழுதுகிறது: “ஆயுதம் தாங்கிய ஆங்கிலேயப் படையினை ராமாவதாரம் எடுத்தது போல ராம் சரண் வில்லும் அம்புமாக வந்து இந்து மதக் கடவுள் ராமனின் வேஷமிட்டு அம்பெய்தி வீழ்த்துவதெல்லாம் என்ன வகையான லாஜிக்.?
எந்த தரப்பை திருப்திப் படுத்த இப்படியான காட்சி? இதற்கெல்லாம் ராஜமெளலி பதில் சொல்லவேண்டும்.”அதாவது ₹550 கோடி செலவு செய்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பிரச்சனை இல்லை, இயக்குநருக்கு பிரச்சனை இல்லை, நடிகர்களுக்கு பிரச்சனை இல்லை, பார்ப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லை ஆனால் இந்த தொலைகாட்சிக்கு ஏன் இப்படி படமெடுத்தேன் என ராஜமெளலி பதில் சொல்ல வேண்டுமாம். இதென்ன கொடுமை?
திராவிடியன் ஸ்டாக்குகளுக்கு இப்படத்தில் இரண்டு பிரச்சனை. ஒன்று தேசபக்தி மற்றும் ஹிந்து மதத்தை உயர்த்தி பிடிப்பது. இரண்டாவது தான் முக்கியமான நெருடல், அதாவது இப்படத்தில் ஆங்கிலேயர்களை இந்தியர்கள் வீழ்த்துவது போல கதை அம்சம் உள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தாலும் பரவாயில்லை,
தமிழகத்தை நீங்களே ஆள வேண்டும் என பிரிட்டிஷாருக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்த நீதிக்கட்சி வாரிசுகளுக்கு மானமுள்ள இந்தியர்கள் பிரிட்டிஷாரை வீழ்த்துவது எப்படி ஏற்புள்ளதாக இருக்கும்? அவர்கள் கண்கள் சிவந்து, இதயம் படபடத்து, கோபம் தலைக்கேறும் அல்லவா? இன்னமும் மனதளவில் இவர்களுக்கு எஜமானர்கள் அவர்கள்தானே?
இன்னொன்ரு படத்தின் கதாநாயகன் ராம்சரண் பூணூல் போட்டிருப்பது. அதுவும் இவர்களுக்கு கண்ணை உறுத்தும். எத்தனையோ முறை பூணூல் என்பது பிராமணர்களுக்கானது மட்டுமல்ல, தமிழகத்திலேயே கூடா செட்டியார்கள், வன்னியர்கள், படுகாக்கள் மற்றும் இன்னும் பிற ஜாதிகளும் பூணூல் அணிகின்றார்கள் என சொல்லியும் அதை பிராமணர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்தி தங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுவாதிலும் திராவிடியா ஸ்டாக்குகளுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.
ஆகவே மக்களை, இத்திரைப்படத்தை நாம் கொண்டாடி தீர்ப்போம். திராவிடியன் ஸ்டாக்குகள் இப்படத்தின் வெற்றியை பார்த்து பார்த்து கதறி துடிப்பதை நாம் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே ரசித்து மகிழ்வோம், கதறல் சத்தம் அதிகமாகவே கேட்கட்டும் நீதிக்கட்சி வாரிசுகளே என குறிப்பிட்டுள்ளார் சூர்யா.மொத்தத்தில் விமர்சனம் என ஒன்றை செய்து தற்போது RRR படத்திற்கு தமிழகம் முழுவதும் இலவச விளம்பரம் தேடி தந்துள்ளது புதிய தலைமுறை.