24 special

கல்லூரி மாணவர்களை ஏமாற்றிவர் கே.எஸ். அழகிரி..!நாராயணன் திருப்பதி பரபரப்பு குற்றச்சாட்டு..!

Narayana tirupathi , ks alagiri
Narayana tirupathi , ks alagiri

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்த கே.எஸ்.அழகிரிக்கு தகுந்த பதலடி கொடுத்துள்ளார் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்துபட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.  அதிலிருந்தே பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் அண்ணாமலையின் சொத்து மதிப்பையும், அவர் பயன்படுத்தும் கை கடிகாரத்தின் மதிப்பையும் வைத்து விமர்சித்தும், தாக்கியும் பேசி வருகின்றனர். அந்தவகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, அண்ணாமலையை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவருடைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: என்னுடைய 50 ஆண்டுகாள பொது வாழ்க்கையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளேன். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.16000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஆனால் கடந்த 1 வருடமாக வாடகை கட்டாத காரணத்தால் தற்போது நோட்டீஸ் பெறுகிற நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்  “4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? அவர் எப்படி 

3 லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச்சை அணிய முடிகிறது?? இதற்கு பணம் கொடுப்பது யார்??? இதுகுறித்து உரிய விசாரனையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்”.

“இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அண்ணாமலை பற்றி குற்றம் சாட்டிய நீங்கள் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி நடத்தி, மாணவர்களை ஏமாற்றியும் மோசடி செய்தும் போலி சான்றிதழ்களை மாணவர்களுக்கு கொடுத்த கல்லூரியின் தலைவர் தான் நீங்கள்”. 

மேலும்  ‘கல்லூரி என்ற பெயரில் பல மோசடிகளையும், கல்வி கொள்ளையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு சமூதாயத்தை பாழாக்கிய நீங்கள், ஒரு வருடமாக வீட்டு வாடகை கட்டவில்லை என்பதும் மோசடியே..! என கே.எஸ். அழகிரியை விமர்சித்து பேசியுள்ளார் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி’. 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும்? உடனே தகுந்த ஆதாரத்துடன் பதிலடி கொடுத்து வரும் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு பொதுமக்கள் மத்தியிலும், பாஜக நிர்வாகிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.