24 special

அசோக் குமாரை தூக்க நெருங்கும் அமலாக்கத்துறை!

ashok kumar, ed
ashok kumar, ed

பிரபலமான வழக்குகளில் ஒன்றாக தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கும் தமிழக முழுவதும் பிரபலமாகி உள்ளது. கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து கொண்டு பொதுமக்களிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை கடந்த 2023 ஆம் ஆண்டு மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களிலும் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையிலும் இறங்கியது. இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அவரை கைது செய்ய முற்படும்பொழுது உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அப்பொழுதிலிருந்து அவர் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டு சிகிச்சைகள் அனைத்தும் முடிந்த பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த புழல் சிறையில் அவருக்கு ஏகப்பட்ட வசதிகள் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் விமர்சனங்களை பெற்றது. 


இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக அவரது தரப்பில் ஜாமீன் மனுக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது அந்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றம் என ஒவ்வொரு நீதிமன்றமாக சென்று ஜாமினிற்கு முன்பாக மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதுப்புது வியாதிகளில் செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டுள்ளார் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்து வந்த எதுவும் பிரயோஜனம் இல்லாமல் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி ஆனது செந்தில் பாலாஜி தரப்பை அகல பாதாளத்தில் தள்ளியது. இதற்கிடையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தன் காவலில் எடுத்து 3000 பக்க குற்ற பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது வேறு செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நிராகரிப்பதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது அது மட்டும் இன்றி செந்தில்பாலாஜியின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அனைத்தும் முறைகேடு நடந்ததற்கு ஆதாரமாக இருப்பதாகவும் அவற்றை குறித்து விசாரணையில் ஈடுபட்ட பொழுதும் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் சகோதரர் அசோக் குமார் மீது குற்றம் சுமத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அசோக்குமார் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது, இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டின் கட்டுமான பணிகளிலும் முறைகேடுகள் மற்றும் கணக்கில் வராத ரொக்கம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் கிடைக்கப்பெற்றதை அடுத்து அது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமாருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது! இப்படி கிட்டத்தட்ட நான்கு சம்மன் களை அமலாக்கத்துறை அசோக்குமாருக்கு அனுப்பியும் இதுவரை அவர் தலைமறைவாகவே இருந்து வருகிறார். 

கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக தலைமறைவாக இருந்து வரும் அசோக் குமாரை தேடும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் மேலும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல்களும் இதுவரை பெரிய வராமல் உள்ள நிலையில், கரூரில் உள்ள தன் வீட்டிற்கு அசோக்குமார் வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை எடுத்து அமலாக்கத்துறை அவரது வீட்டையும் அசோக் குமாரின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினரையும் விசாரித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படி எட்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த அசோக்குமார் தற்போது கரூரில் தன் வீட்டிற்கு வந்து சென்ற தகவல் அமலாக்கத்துறைக்கு தெரிந்து அசோக் குமாரை பிடிக்கும் நிலையில் அவரை நெருங்கி விட்டதாகவும் தேர்தலுக்குள் அசோக் குமாரையும் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என அமலாக்கத்துறை அசோக்குமாரின் விவகாரத்தில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.