Cinema

இவரா அவரா போட்டி போடும் ரசிகர்கள்... வரிசையில் நிற்கும் முன்னனி இயக்குனர்கள்?

Vetrimaaran, Vijay, Atlee
Vetrimaaran, Vijay, Atlee

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் நடிகர் விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என அவரது ரசிகர்களால் அழைத்து வந்தவர் விஜய். சினிமாவில் வெற்றி படத்தின் மூலம் சிறிய பையனாக அறிமுகமானவர் நடிங்கர் விஜய் ஆரமபத்தில் இருந்து பல தோல்வி படங்களை கொடுத்தாலும் தனது அப்பா ஒரு இயக்குனர் என்பதால் பல படங்களில் நடிக்க வைத்து முன்னணி நடிகராக தோற்றத்தை அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் இதுவரை 67படங்களில் நடித்துள்ளார் தற்போது 68 வது படத்தில் நடித்து வரும் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.


இதற்கிடையில், நடிகர் விஜய்  அரசியல் எண்ட்ரி கொடுக்க இருக்கும் விஜயின் கடைசி படமாக இருக்கும் என கூறப்பட்டது. அரசியலில் அதிகாரபூர்வமாக வருவதாக அறிவித்த விஜய் பிற நடிகர்களுக்கு சாதகமாக அமைந்தாலும் அரசியலில் இருக்கும் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நடிகர் விஜய் இரண்டு வருடம் கேப் எடுப்பார் என பலரும் கிசுகிசுத்தனர். அதனை உறுதிப்படுத்துவது போல தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை அறிமுகப்படுத்தினார். இதனால் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படமான 68 மற்றும் 69 படத்திற்கு பிறகு சினிமா பக்கம் திரும்பமாட்டேன் என அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தற்போது நடித்து வரும் 68 பிறகு 69 வது படத்தில் யாருடன் விஜய் இணையப்போகிறார் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தான் விஜயின் கடைசி படமான தளபதி69ஐ இயக்க போகிறார் என்ற தகவல்கள் கசிந்தது. ஆனால் அந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவே இல்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் அரசியலுக்குள் வருவதால் அதுவும் நடக்காது என்றனர்.பின்னர் சூப்பர்குட் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்று ஆர்.பி.செளத்ரி மற்றும் ஜீவா கூட சொல்லி இருந்தனர். ஆனால் அவர்கள் கொடுக்கும் இயக்குனர்கள் விஜயிற்கு செட்டாகவில்லை. இந்நிலையில் இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் இல்லை ஹெச்.வினோத் தான் என்றனர் சிலர்.

இந்த வரிசையில் பிரபல இயக்குனரான வெற்றி மாறன் இணைந்தார். அதவது, வாடிவாசல் படம் தள்ளிப்போவதால் விஜயை வைத்து இயக்க முனைப்பு காட்டுவதாக சில சினிமா வட்டாரங்கள் கூறினர். அதேபோல்  வெற்றி மாறன் தான் இயக்கப்போகிறார் என செய்திகள் தீயாக பரவியது. ஆனால் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் விஜயிற்கு இருக்கும் நேரம் கம்மி என்பதால் கண்டிப்பாக அவர் வெற்றிமாறனுடன் இணைய வாய்ப்பில்லை. விஜய் சேதுபதி, சூரியை வைத்து நன்கு வருடத்திற்கு படம் எடுக்கும் அவர் விஜயெல்லாம் சான்ஸ் இல்லை என கூறினார். 

மேலும், அட்லீ கூட இந்த லிஸ்ட்டில் இருப்பதால் யார் அந்த இயக்குனர் என்ற கேள்விகள் ரசிகர்களை துளைத்து வருகிறது. ஏற்கனவே அட்லீயுடன் இணைந்து பைக்கில் படத்தில் நடித்தால் அப்போது அட்லீயே மீண்டும் அண்ணனை வைத்து ஒரு படம் இயக்குவேன் அதில் பாலிவுட் நடிகர்களை அறிமுகப்படுத்துவேன் என கூறினார். அதனால் அட்லீ இருக்கலாம் என கூறப்பட்டாலும், இன்னும் யார் விஜய் 69ஐ இயக்குவார் என்பது உறுதியாகவில்லை. ஒருவேளை 68 உடன் படத்தை முடித்து கொண்டால் ரசிகர்கள் அவ்ளோதான் என கூறப்படுகிறது. கடைசி படம் என்பதால் விஜய் தீவிரமாக இருப்பார் மிக பெரும் வெற்றி படமாக அமைக்க திட்டம் போட்டு வருகிறார் என கூறப்படுகிறது.