அஸ்ஸாம் : இந்தியாவை ஒன்றியம் என அழைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா. இவர் 25 வருடங்கள் காங்கிரசில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சோனியா குடும்பத்திற்கு எதிராக செயல்படுவது காங்கிரசில் தேசத்துரோகமாக பார்க்கப்படுகிறது என மேலும் விமர்சித்தார்.
மேலும் முதல்வர் கூறுகையில் " இந்தியா மாநிலங்கள் ஒன்று சேர்ந்த ஒன்றியம் என்றால் இந்திய தேசிய காங்கிரஸ் என ஏன் அழைத்துகொள்கிறார்கள். இந்தியாவின் 5000 ஆண்டுகால வளமான வரலாறு பற்றி ராகுலுக்கு தெரியுமா. காங்கிரஸ் தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் என அழைத்துக்கொண்டு தேசம் முழுவதும் கூட்டங்கள் நடத்தியபோது மாநிலங்களின் ஒன்றிய கூட்டம் என ஏன் கூறவில்லை.
ராகுல்காந்தி நாட்டை பிரிக்க பார்க்கிறார். பிரிவினையை விதைக்கிறார். அவர் மட்டுமல்ல நமது தேசத்தை ஒன்றியம் என கூறும் அனைவரும் பிரிவினைவாதிகளே. பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிக்கின்றனர். உல்பா அமைப்பு சொல்வதற்கும் இவர்கள் சொல்வதற்கும் வித்தியாசமில்லை. மொழி ஒன்று மட்டுமே வேறுபட்டுள்ளது.
இதில் ராகுலின் தவறு எதுவும் இல்லை என கருதுகிறேன். அவர் ஜெ.என்.யுவில் யாரிடமாவது இந்த பிரிவினைவாதங்களை ட்யூசன் மூலம் கற்றுக்கொண்டிருப்பார் என தோன்றுகிறது. காந்தி குடும்பத்திற்கு எதிராக கருத்து கூறுவது தேசத்துரோகம். ஆனால் பிஜேபியில் முதலில் நாடு. அதன்பிறகே கட்சி. மதரஸாக்களை மூடுவது பற்றி கேட்கிறீர்கள்.
அரசு எடுக்கும் நடவடிக்கை மக்களின் நலனை சார்ந்தே இருக்கும். மதரஸாக்களை மூடுவதால் மட்டுமே இந்திய இஸ்லாமியர்கள் கல்வியில் மேம்பட முடியும். இஸ்லாமியர்கள் கல்வியில் முன்னேற மதரஸா என்ற வார்த்தையே ஒழியவேண்டும். நீங்கள் மதத்தை போற்ற விரும்பினால் அதை உங்கள் வீட்டிலேயே தொடருங்கள். பள்ளிகளில் மட்டுமே அறிவியல் மற்றும் கணிதம் கற்க முடியும்" என நேற்று நடந்த ஆர்கனைசர் பத்திரிக்கையின் 75 ஆவது ஆண்டுவிழாவில் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா தெரிவித்தார்.