24 special

வெடிகுண்டு அரசியல்..! பிஜேபி தலைவர் பகிரங்க ஒப்புதல்..!

modi and mamata banerjee
modi and mamata banerjee

மேற்குவங்கம் : இந்தியாவிலேயே அரசியல் படுகொலைகள் சாதாரணமாக நடக்கும் இரு மாநிலங்கள் மேற்குவங்கம் மற்றும் கேரளா என கூறப்படுகிறது. அதிலும் மேற்குவங்கத்தில் ஜோதிபாசு ஆட்சிக்காலத்திலேயே வன்முறைகளும் கொலைகளும் மாநிலத்தையே உலுக்கியிருந்தது. மேலும் கொல்கொத்தா பழத்தில் ஹிந்து சாதுக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்டதை மேற்குவங்க மக்கள் இன்னும் மறக்கவில்லை.


இந்நிலையில் திரிணாமூல் காங்கிரசிலிருந்து கடந்த சட்டமன்றத்தேர்தலுக்கு முன்னர் விலகி பிஜேபியில் சேர்ந்த தலைவர்கள் மீண்டும் மமதாவிடமே சரணடைந்துவருகின்றனர். அந்த வரிசையில் நேற்றுமுன்தினம் பிஜேபி எம்பியான அர்ஜுன் சிங் மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார். இதுகுறித்து பிஜேபி தலைவர்களிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

மேற்குவங்க பிஜேபி தலைவரான திலீப் கோஷிடம் இதுகுறித்து நிருபர்கள் வினா எழுப்பினர். திலீப் கோஷ் பதிலளிக்கையில் "கொள்கை அடிப்படையில் அரசியல் செய்ய தெரியாதவர்கள் பிஜேபியில் இணைந்திருப்பது மிக கடினம். அர்ஜுன் சிங் கடந்தகாலத்தில் வெடிகுண்டு செய்தவழக்கில் சிக்கினாரே என கேட்கிறீர்கள்.

மேற்குவங்க அரசியலில் வெடிகுண்டு அரசியல் சாதாரணமாகிவிட்டது. அதிலும் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியே அரசியல் எதிரிகளை கொல்கிறார்கள். திரிணாமூல் கட்சியில் இருந்து யார்வந்தாலும் சரி அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அர்ஜூன்சிங்கால் பிரச்சினையை எதிர்கொள்ளவோ அல்லது சரிசெய்யவோ முடியாது என்பது தான் அவரின் பிரச்சினை. 

மேற்குவங்க அரசியலில் தொண்டர்களை போட்டியாளர்களை கொல்ல காலம்காலமாக நாட்டுவெடிகுண்டையே பயன்படுத்திவருகின்றனர். 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் மாநில தலைமை இதை ஒரு பிரச்சாரப்பிரச்சினையாக மாற்றியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியல் கட்சி பிஜேபி. கொள்கை மற்றும் கொள்கை கட்டமைப்பில் நம்பிக்கையில்லாதோர் நீடிப்பது கடினம்" என செய்தியாளர்களிடம் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.