இன்று பிரபலமாவதற்கும் பிரபலமாகி அதே சமயத்தில் வருமானத்தை ஈட்டுவதற்கும் ஒரு முக்கிய தளமாக இயங்கி வரும் யூடியூப் பலரது வாழ்க்கையில் நிலைத்து பார்க்க முடியாத பிரபலத்தையும் வருமானத்தையும் கொடுத்து வருகிறது சிலர் தான் திட்டமிட்டபடி அந்த youtube சேனலை திறம்பட நடத்தி செல்கிறார்கள் ஆனால் சிலர் பதிவிடும் சில வீடியோக்கள் சர்ச்சையையும் பெரும் பிரச்சனையையும் மாட்டிக் கொள்கிறது பிறகு அதனால் அந்த youtube சேனலை மூடும் அளவிற்கு சூழ்நிலைகள் அவர்களை கொண்டு போய் விடுகிறது அது மட்டும் இன்றி சிலர் பதிவிடும் சில பதிவுகள் வழக்குகளையும் சந்தித்து லட்சக்கணக்கில் நஷ்ட ஈடை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பையும் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பிரபல யூட்யூபருக்கு வந்த சோதனை மற்ற யூடியூப் சேனல் நடத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சென்னையைச் சேர்ந்த திருநங்கை அப்சரா ரெட்டி பிரபல மாடலாகவும் பயிற்றுநராகவும் இருந்து வருகிறார். இவர் தனது ஆரம்பத்தில் சில டிவி நிகழ்ச்சிகளிலும் ஒரு தனி தொலைக்காட்சியை இவர் நடத்தியும் உள்ளார். இருப்பினும் அவரது முகத்தை மக்கள் மத்தியில் தெரியப்படுத்தியது ஜெயா டிவியின் டாக் ஷோ தான்! இதனை அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது கொண்ட ஈர்ப்பால் இவர் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சி இரண்டாகப் பிரியும் பொழுதும் சசிகலாவின் அணியான டிடிவி தினகரனுடன் இணைந்தார். பிறகு டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட காங்கிரஸில் சேர்ந்தார் காங்கிரஸில் அவருக்கு மகிளா காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர் என்று முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் 2016ல் பாஜகவில் சேர்ந்தார் அப்சரா ரெட்டி. அதற்குப் பிறகாச்சும் கட்சி மாறாமல் இருந்தாரா அதுவும் இல்லை பாஜகவில் இருந்து அமமுகவிற்கு சென்றார் பிறகு காங்கிரஸ் சென்றார் பிறகு மறுபடியும் அதிமுகவில் இணைந்து அதிமுக செய்தி தொடர்பாளராக தற்போது உள்ளார்! இந்த நிலையில் தான் இவரைக் குறித்து பிரபல மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் அவதூறாக பேசி 10 வீடியோக்களை தனது youtube சேனலில் பதிவிட்டுள்ளார்.
இதனை அறிந்ததும் அப்சரா தன்னைக் குறித்து வதந்திகளை இவர் பரப்புவதாக புகார் அளித்து ரூபாய் 1.25 கோடி நஷ்ட ஈடு தனக்கு வழங்க வேண்டும் என்றும் தன்னைக் குறித்து வெளியிட்ட 10 வீடியோக்களையும் youtube சேனலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட் அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி குறித்த வழக்கு விசாரித்து ஜோ மைக்கேல் பிரவீன் அப்சராவிற்கு 50 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது மேலும் youtube சேனல்களில் கருத்துக்கள் வெளியிடப்படும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உள்ளது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கிடையில் தன் தரப்பு நியாயத்தை கேட்காமல் சென்னை ஹை கோர்ட் ரூபாய் 50 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டு உள்ளதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஜோமைக்கேல் பிரவீன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனால் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என் சதீஷ்குமார் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது இந்த வழக்கில் ஜோ மைக்கிலுக்கு நோட்டஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் இது குறித்து ஜோ மைக்கேல் பிரவீனுக்கு நன்றாக தெரியும் என்று அப்சரா ரெட்டி தரப்பில் கூறப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் அப்சரா தரப்பு தாக்கல் செய்ததை அடுத்து அவற்றை ஆய்வு செய்த நீதிபதி, ஜோ மைக்கேல் பிரவீன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அப்சரா ரெட்டிக்கு ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.