24 special

கோவையில் பாஜக போடும் பிளான்.. உற்று நோக்கும் திராவிட கட்சிகள்..!

Annamalai, Stalin
Annamalai, Stalin

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டியாக இருந்தாலும் களத்தில் அரசியல் தலைவர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். கூட்டணி தலைவர்கள் தொடங்கி பாஜக வேட்பாளர்கள் வரை பம்பரமாக செயலன்று வரும் அண்ணாமலை. கோவையில் அவரின் வெற்றிக்காக கட்சியின் சார்பில் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாம்.


                                                                                                      

கோவை தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் வெற்றியின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. மக்களுக்கும் அண்ணாமலைக்கு தான் தங்களது வாக்குகள் என்று கூறி வருகின்றனர். தொகுதி முழுவதும் தனக்கு ஆதரவு திரட்டும் வகையில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலையின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று காங்கிரஸ் தலைமை ஸ்டாலினிடம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் போட்டியிடுவதாலேயே, இந்த தொகுதி தேசிய அளவிலும் கவனத்தை பெற துவங்கிவிட்டது. தமிழகத்தில் பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது என்றாலும், கோவையில் நிலவும் போட்டி, தமிழக அரசியல் கட்சிகளுக்கே ஒரு சவாலாகவும் அமைந்து வருகிறது.

                                                                                                   

அண்ணாமலை கோவையில் நிற்பதால் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதால் மக்களுக்கு பணத்தையும், பரிசு பொருட்களையும் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அண்ணாமலை நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன். பாஜக எதுவும் செலவு செய்யாது.. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த கோவை தொகுதி இருக்கும் என்று அவர் முன்னதாக கூறினார். இந்நிலையில் பாஜக அண்ணாமலை வெற்றி பெறுவதற்கு குழுக்களை அமைத்து தேர்தல் வியூகங்களை தேர்ந்தெடுத்துள்ளதாம்.

                                                                                                                

கோவையில் இருக்கும் பல்வேறு ஜாதி அமைப்புகளையும் சந்தித்து, அவர்களை அண்ணாமலைக்கு ஆதரவாக திருப்ப மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு ஆப்டிக்கபடுவதாகவும் அவர்கள், ஜாதி அமைப்பினரை சந்தித்து, ஏன் அண்ணாமலைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து விளக்க வேண்டும். பின், அண்ணாமலைக்கு ஓட்டளிக்க கேட்க வேண்டும். அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஓட்டளிக்க கேட்க வேண்டும். ஏற்கனவே இந்த வேலையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கோவையில் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு சொந்த வீடு இல்லை. எனவே, பிரதமரின் வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில், அந்த மக்களுக்கு உதவி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.


ஏப்ரல்10ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி கோவையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். அண்ணாமலையின் ஒவ்வொரு நகர்வையும் அதிமுக, திமுக பார்த்து வருகிறதாம். கோவையில் அண்ணாமலையின் பிரச்சார எழுச்சியானது, டெல்லி வரை எதிரொலித்திருக்கிறது. தமிழகமே கோவையை உற்று நோக்கி வரும் சூழ்நிலையில். கோவை மக்கள் அண்ணாமலை வெற்றி பெற்றாலும் தமிழக மாநில தலைவராக பயணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.