திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அனைவரும் ரஜினிகாந்த்தினை நினைப்பார்கள். அதுவே லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது நயன்தாரா மட்டும்தான்!! நயன்தாராவை பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு செய்திகள் வெளிவந்து கொண்டே தான் உள்ளது. சமீபத்தில் கூட நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் விவாகரத்து என ஒரு புரளி கிளம்பியது. ஆனால் அது எல்லாம் பொய் விக்னேஷ் சிவன் தனது இணையதள பக்கத்தில் சூப்பரான ஒரு போஸ்டை போட்டு இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதைத்தொடர்ந்து தற்போது நயன்தாரா தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு கேரளா சென்றுள்ளார்.அப்போது நடிகை நயன்தாரா மிட்நைட்டில் போயி ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ தான் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பார்க்கப்படுகிறது. அதுவும் இவர் தனது கணவர் விக்னேஷ் சிவனை விட்டு விட்டு இரவில் தனது நண்பரோடு வெளியே சுற்றியுள்ளார்.
அன்னபூரணி படத்திற்குப் பிறகு test, மண்ணாங்கட்டி போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் நயன்தாரா. இவர் சமீபத்தில் தனது கணவரான விக்னேஷ் சிவனுடனும் அவருடைய இரண்டு குழந்தைகளுடனும் வெளிநாட்டிற்கு ஊர் சென்று வந்தனர். வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்கள் கூட தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். அதிக அளவில் ட்ரண்ட் ஆகிக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தனது நண்பர்களுடன் இரவில் ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டு உள்ளது!! அந்த வீடியோவில் நயன்தாராவின் இரண்டு நண்பர்கள் சாலையின் எதிர்பக்கத்தில் உள்ள ஒரு கடையில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை வைத்து விளம்பரம் செய்யப்பட்ட பேனரை பார்த்து வியப்பாக நின்று கொண்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டு உள்ளனர். அதில் ஒருவர் இந்த நேரத்தில் நயன்தாராவை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று கூறுகிறார். இப்படி கூறிவிட்டு திரும்பிப் பார்க்கையில் அவரின் பின்னால் நயன்தாரா கூலாக நின்று ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார். அவரைப் பார்த்தவுடன் இரண்டு நண்பர்களும் அப்படியே ஷாக் ஆனது போல் நயன்தாராவிடம் ஓடி சென்று செல்பி எடுத்துக் கொள்கின்றனர். அதை பார்த்து நயன்தாரா அவர்களை ஜாலியாக அடிக்க செல்கிறார்.
இது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் அமைந்திருந்தது. இது நண்பர்களாகவே உருவாக்கிய வீடியோ என்பதால் கொடுத்த காசுக்கு மேல் நடிப்பியா அப்படி சொல்கின்றது போல் நயன்தாரா அவரின் நண்பர்களிடம் கூறுவது போல் அமைந்திருந்தது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எங்கு சென்றாலும் நயன்தாரா தனது கணவரான விக்னேஷ் சிவன் உடனே சென்று வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவாரே!! இதில் விக்னேஷ் சிவனை காணவில்லை என்று பார்த்தனர். ஆனால் இந்த வீடியோவை முதலில் இணையத்தில் அப்லோட் செய்தது நடிகை நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் தான்!!! ஏனென்றால் நயன்தாராவின் நண்பர்கள் ஒரு பக்கமும், நயன்தாரா மற்றொரு பக்கமும் இருக்கின்றார். காட்சியில் வராதவர் இதனை படம் பிடித்துக் கொண்டுள்ளவர் தான். எனவே அவர் விக்னேஷ் சிவன் ஆகத்தான் இருப்பார் என்று நினைக்க வைக்கிறது.
மேலும் அவரே இணையத்தில் பதிவிட்டு இருப்பது எந்தவித சந்தேகமும் இல்லாமல் அந்த கேமராமேன் இவர்தான் என்று உறுதிப்படுத்த முடிகிறது. இந்த ஒரு வீடியோ இப்போது இணையத்தையே கலக்கிக் கொண்டு உள்ளது!! என்னதான் திரை உலகில் பெரிய பிரபலமான முன்னணி நடிகையாக இருந்தாலும் கூட தனது நண்பர்களுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பதை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. வாழ்வில் எந்த நிலைக்கு சென்றாலும் நண்பர்களிடம் மட்டும் எப்போதும் ஜாலியாக இருப்பது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல பிரபலமாக இருந்தாலும் கூட அப்படித்தான் என்று இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது