தினத்தந்தி நாளிதழின் நிறுவரான ஆதித்யநாத்யனால் நடத்தப்பட்டு வந்த நாம் தமிழர் இயக்கம் 2010 ஆம் ஆண்டில் இருந்து நடிகரும் சமூக ஆர்வலருமான சீமான் தலைமையில் வழி நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மற்றும் புதுச்சேரியில் காணப்படும் இந்த கட்சி 2009 ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடைபெற்ற போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பொழுது அந்த போரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் இதனால் அதை தொடர்ந்தே 2010ல் தமிழ் தேசியக் கொள்கைகளை பறைசாற்றும் விதமாக இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவை அடுத்து பெரும்பாலான இளைஞர்களையும் பெண் நிர்வாகிகளையும் நாம் தமிழர் கட்சி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசியலில் இன்னும் நிலைத்து நிற்பதற்கு போராட்டங்களையே இந்த கட்சி முன்னெடுத்து வருகிறது 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இயங்கி உள்ள இந்த கட்சியின் தலைவர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமியின் விவகாரம் சமீபத்தில் பூதாகரமாக வெடித்ததும் குறிப்பிடத்தக்கது. அதாவது சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக இவ்வளவு வருடங்கள் ஏமாற்றியதாகவும் இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் நடிகை விஜயலட்சுமி சீமானை குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பானது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகிகளில் ஒருவரான வெண்ணிலா தாயுமானவன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் கட்சி சார்ந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் சிறப்பாக பங்கு பெற்று சேவையாற்றி வரும் இவர் மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கப்படுவதற்கு குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் நடந்த ஒரு தலைப்பட்சத்தை குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தவர், அதாவது எந்த ஒரு விதிமுறைகளும் இந்த கூட்டத்தில் நடைபெறவில்லை அனைத்தும் மீறப்பட்டு இருந்தது ஒருவர் தன் கருத்தை மூன்று நிமிடங்களில் சொல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது ஆனால் தன் கருத்தை ஒருவர் இத்தனை நிமிடத்தில் சொல்ல வேண்டும் என்கின்ற ஒரு விதியும் இல்லை அது மட்டும் இன்றி இந்த கூட்டமானது ஒரு ஜனநாயகபூர்வமாக நடத்தப்படும் கூட்டம் அல்ல ஒரு கட்சி சார்பாக நடந்த கூட்டம் நாம் தமிழர் கட்சி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தால் சமூகம் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவி இருக்கும் என்றும் திமுகவின் கருத்திற்கு மாற்ற கருத்து சொல்பவர்களை மேடை ஏறி திமுகவினர் அடிக்க சென்ற சம்பவம் நிகழ்ந்ததாக திமுகவின் ஒருதலை பட்சத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தவர்.
தற்போது இவருக்கே முன்பின் தெரியாத ஐடியில் இருந்து தவறான அழைப்புகள் வந்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெண்ணிலா தாயுமானவர் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பின்வரும் முகநூல் ஐடி தனது அந்தரங்க பாகங்களின் படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களின் படங்களை எனது மெசஞ்சர் இன்பாக்ஸுக்கு அனுப்பியது, அதைத் தொடர்ந்து வீடியோ அழைப்பும் செய்தது, நேரம் இரவு 12.30. நான் அதனை பிளாக் செய்து புகார் அளித்துள்ளேன், காலையில் cybercrime புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த ஐடியையும் மேற்கோள் இட்டு காட்டியுள்ளார். இப்படி பெண் அரசியல் பிரமுகருக்கு இரவு 12:30 மணியளவில் தொந்தரவு செய்தது யாராக இருக்கும் என பல கேள்விகள் இணையத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.