24 special

முன்பே எச்சரித்துவிட்ட டெல்லி மேலிடம்... அலட்சியப்படுத்தி விட்ட திமுக அரசு, வெளியான அதிர்ச்சி தகவல்!

dmk,delhi Parliament
dmk,delhi Parliament

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கடந்த வாரம் மிக்ஜம் புயலால் கனமழை பெய்தது இந்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முகலிவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், வேளச்சேரி, மணலி, திருவெற்றியூர், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம் போன்ற பகுதிகள் முழுவதிலும் மழை நீர் தேங்கி இருந்தது இதுமட்டுமின்றி சென்னையில் மற்ற முக்கிய இடங்களிலும் மழைநீர் தேங்கியிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இன்னும் சில பகுதிகளில் மழை நீரில் கலந்து இருந்த ஆயில் கழிவுகள் மக்களுக்கு வேறுவிதமான உடல் உபாதைகளையும் ஏற்படுத்தியது மீட்பு பணிகளும் நிவாரண பொருட்களும் கிடைக்காமல் மக்கள் தங்கள் வீட்டிற்குள்ளே முடங்கி இருக்கும் நிலை கடந்த ஐந்து நாட்களாக இருந்தது. ஆனால் இப்படி சென்னையில் மழை நீர் தேங்காத வண்ணம் பல நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டது என்றும் கிட்டத்தட்ட அதற்காகவே ரூபாய் 4000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் தமிழக அரசின் இந்த கருத்து சென்னை மக்களிடையே பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது. கடந்த 2015 விட தற்போது பெய்த மழையின் அளவு மோசமாக உள்ளது இருப்பினும் அப்போது இருந்த மீட்பு நடவடிக்கைகள் கூட இப்பொழுது ஏன் நடைபெறவில்லை நிவாரண பொருட்களில் கிடைக்கவில்லை பால் தண்ணீர் உணவு என அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயர்ந்ததற்கு காரணம் என்ன என்று மக்கள் அரசை நோக்கி கேட்கும் கேள்விகள் அனைத்தும் சரமாரியாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இப்படி ஒரு கோர தாண்டவத்துடன் புயல் அடிக்க உள்ளது அதனால் சென்னை பெரும் பாதிப்பை சந்திக்கும் என்ற தகவலை மோடி அரசு முன்கூட்டிய தமிழக அரசிடம் தெரிவித்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

அதாவது சமீபத்தில் தனியார் யூ டுயுப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரிடம் இவ்வளவு மழை சென்னையில் பொழியும் பொழுது ஒரு அரசால் எப்படி தடுக்க முடியும் எப்படி விரைவான மீட்பு பணியில் விளங்க முடியும் ஆனால் நீங்கள் தொடர்ந்து அரசை குறித்து விமர்சனம் செய்து வருகிறீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டபோது சென்ட்ரல் கேபினட் செகரட்டரேட்டின் பிரஸ் ரிலீஸ் என்று ஒரு ரிப்போர்ட்டை வழங்கினார். அதில் 1. 12 . 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் மிக்ஜம் புயல் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் குழுவிடம் விளக்கினார், டிசம்பர் மூன்றாம் தேதி தென்மேற்கு வங்க கடலில் புயலாக மாறி வடமேற்கு திசைகளில் நான்காம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம் கடற்கரையை அடையும், ஐந்தாம் தேதி காலையில் தான் புயல் கரையை கடக்கும்! ஆதலால் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள், புதுச்சேரியின் நிதித்துறை செயலாளர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் புயலின் முன்னெச்சரிக்கை குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்  மேலாண்மை குழுவிடம் விளக்கினர். 

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தப்பட்டது போதுமான தங்குமிடங்கள் படகுகள் மீட் பண்ணி வாகனங்கள் உணவு அவசர சேவைகள் அனைத்தையும் தயாராக இருக்க வேண்டும், இந்த மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் மத்திய அரசின் இந்த கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டனர் என்பது குறித்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளது. பொதுவாக புயல் வரப்போகிறது என்றால் யூனியன் கவர்மெண்ட் பாதிக்கப்படும் மாநில தலைவர்களை அழைத்து இது குறித்து எச்சரிப்பதும் வழக்கமான ஒன்று, மேலும் இந்த கூட்டத்தில் தமிழக சீஃப் செகரட்டரி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளோம்! அனைத்து முன்னெச்சரிக்கைகளும் போதுமான அளவில் தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் . 
இதன் மூலம்  மத்திய அரசு பாதிப்பு ஏற்பட உள்ளது என்பது குறித்து முன்னெச்சரிக்கையை இந்த மாத 1ஆம் தேதி அன்றே கொடுத்தும் தமிழக அரசு அலட்சியமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது இதனால் தமிழக அரசுக்கு வேறு விதமான பிரச்சனைகள் எழும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.