கடந்த ஆறு நாட்களாக செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் தலைப்பு செய்தியாக வருவது சென்னையும் சென்னையில் ஏற்பட்ட கனமழையின் அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுமே! மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்காமல் வீட்டிற்கும் யாரும் வராமல் தத்தளித்து தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இதற்கு முன்பாக சென்னையில் மழை பொழிந்த பொழுது வெள்ளம் ஏற்பட்ட பொழுதும் மழை நீர் தேங்காத பகுதிகள் அனைத்தும் தற்பொழுது மழைநீர் வெள்ளத்தில் மூழ்கி இருந்ததும் 2015 இல் வந்த வெள்ளத்தின் பொழுது கிடைத்த நிவாரண பொருட்கள் மீட்பு நடவடிக்கைகள் தற்பொழுது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருப்பினும் அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தேங்கி இருந்த மழைநீர் அனைத்தும் வடிந்துள்ளதாகவும், பெரும்பாலான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் சில ஊடகங்கள் இது போன்ற தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் 2015 எங்களை தேடி உதவிகள் வந்தது ஆனால் இந்த முறை நாங்களே தேடி சென்று உதவி கேட்டாலும் அதை செய்வதற்கு ஆள் இல்லை என்று கொந்தளிப்பில் மக்கள் தெரிவிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிறது.
அந்த அளவிற்கு சாதாரண மக்களில் இருந்து பெரும் திரையுலக பிரபலங்கள் வரை இந்த மழையால் பெரும் அவதியுற்றனர் அவரவர் தங்கள் தரப்பில் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அதற்கு என்ன நிலை இதுவரை இருந்துள்ளது என்பது குறித்தும் தெரிவித்து அரசின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனையும் தாண்டி சமூக வலைதளங்களில் கடலுக்கே நாங்க தண்ணி கொடுத்துக்கிட்டு இருக்கோம் கர்நாடகாவுக்கு தண்ணி வேணுமான்னு கேளுங்க நம்ம கொடுத்திடலாம்! வெயில் கொளுத்தும் சென்னையை குளுகுளுவென்று கொடைக்கானல் போல் மாறி உள்ளது இவற்றிற்கு உதவி புரிந்த தமிழக அரசுக்கு நன்றி என்ற திமுகவை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்களும் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும் திமுக தரப்பில் 95 சதவிகித நிவாரண பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை மீண்டு வந்து விடும் பால் பாக்கெட் அனைத்தும் சரியாக வழக்கம் போல் விற்பனைக்கு வரும் என திமுக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்ததை அடுத்து திமுகவின் எம்எல்ஏவும். சட்டசபையின் சபாநாயகருமான அப்பாவு, என்னையா இப்படி சொல்றீங்க, சென்னை பள்ளிக்கரணை முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் என் பேர குழந்தைக்கு கடந்த 36 மணி நேரமாக பால் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இப்படி திமுக கூறும் தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் திமுகவின் எம்எல்ஏவும் சட்டசபையின் சபாநாயகரான அப்பாவும் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறி வருத்தம் தெரிவித்தது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் மக்கள் தரப்பில் அரசு மீது உள்ள அதிருப்திகளும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிவாரண பணிகள் உண்மையில் எங்களுக்கு கிடைக்கப் படுவதில்லை என்றும் தெரிவித்து வருகின்ற நிலையில் அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏவே தனக்கு நடந்த பாதிப்பை குறித்து தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை பெற்றுள்ளது. இதனால் அறிவாலயத்தில் இருந்து சபாநாயகர் அப்பாவுவை கூப்பிட்டு கண்டித்ததாக தெரிகிறது. உங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை பேசாமல் இருக்கவும் எனவும் தடித்த வார்த்தைகள் அப்பாவுவை நோக்கி பறந்ததாக சில தகவல்கள் கசிந்துள்ளன..