24 special

மக்கள் தத்தளிக்கும் நேரத்தில்...தமிழக அரசு கேட்ட 5 ஆயிரம் கோடி எதற்கு தெரியுமா?

CM Stalin, PM Modi
CM Stalin, PM Modi

சென்னையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் ஏற்பட்டது சுமார் இரண்டு நாட்களாக மழை பொழிந்தது. இதன் மூலம் சென்னையின் வாழ்வாதாரம் முடங்கி கிடக்கிறது இது நாள் வரை மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாத சூழ்நிலை  நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி நிவாரண தொகை கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது.


புயல் எச்சரிக்கையை வானிலை மையம் முன் கூடியே தெரிவித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது. தொடர்ந்து சென்னையில் 24 மணிநேரம் பொழிந்த மழையின் காரணமாக சென்னை மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். முன்னதாகவே தமிழக அரசு 4000 ஆயிரம் கோடிக்கு மழை நீர் வடிகால் வாரியம் பணி சென்னையில் நடத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் 97 சதவீதம் முடித்து விட்டதாக தெரிவித்தார், அவரை தொடர்ந்து அமைச்சர்கள் 98 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறினார்கள். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். அதாவது, மழை நீரை அரசு அப்புறப்படுத்தி விட்டதாக நினைத்தனர். 

ஆனால், இரண்டு நாட்களாக பொழிந்த மலையில் சென்னை மாநகரமே திக்குமுக்கி நின்றது, மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் அந்த 4000 ஆயிரம் கோடி என்னானது என இணையத்தில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மேலும், தமிழக அரசு அந்த செலவிட்ட தொகை குறித்து வாய் திறக்காமல் இருந்தது. அப்போது மத்திய அரசிடம் 5060 கோடி பணம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். மக்கள் அந்த 4000 ஆயிரம் கோடி என்ன ஆனது என சொல்லாமல் இருந்த அரசு இப்போ 5000 கோடி என செலவு செய்வதற்கு கேட்கிறது என கேள்வி எழுப்பினர். இதற்கிடையில் எதிர்க்கட்சியை சேர்ந்த அதிமுக, பாஜக போன்ற கட்சி நிறுவனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மக்களுக்கு உணவு பொருட்களை கொண்டு சேர்க்க சென்றபோது திமுகவினர் மிரட்டல் விட்டதாக சமூக தளத்தில் வீடியோ பதிவிட்டனர். 

மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதிய நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். அதன் பிறகு முதற்கட்டமாக 450 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு. இந்நிலையில் அரசியல் விமர்சகர்கள் தமிழக  அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த 5000 கோடி நிவாரண தொகையாக கேட்கும் அரசு மக்களுக்கு என்ன செய்யப்போகிறது, குடும்பத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்கியிருக்கிறது என இவர்கள் எதற்காக 5000 கோடி மத்திய அரசிடம் கேட்கிறார்கள்? இதுவரை மத்திய அரசை விமர்சனம் செய்து வந்த தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் இப்போ மட்டும் மத்திய அரசு என கூறுவது கண்டனத்திற்குறியது. அந்த 4000 ஆயிரம் கோடியில் ஊழல் நடந்தது போல் 5000 கோடி கேட்டு அமைச்சர்கள் ஏப்பம் விடுவதற்காக கேட்கிறார்களா? என சரமாரியாக கேள்வியயை முன் வைத்துள்ளனர்.