24 special

தேர்தல் நிதியை கொடுத்துவிட்டு அமித்ஷா கூறிய அந்த வார்த்தை

amitshah , tr balu
amitshah , tr balu

தொடர் பின்னணிவுகளை சந்தித்து வந்து திமுக சென்னையில் மழை காலம் வரும் சமயத்தில் மழை நீரை தேங்கா விடக்கூடாது அப்படி தேங்க விடாமல் பார்த்துக் கொள்வதன் மூலமே நமக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது அதுவே கடைசி வாய்ப்பு அதனைத் தவிர விடக்கூடாது என பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகிக் கொண்டிருந்தது. சென்னை மேயர் பிரியாவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் களத்தில் இறங்கி மழை நீர் வடிகால் குறித்த நடவடிக்கைகள் ஆய்வு செய்த செய்தியும் வெளியானது. 


ஆனால் அவை அனைத்தும் வீணாகப் போகும் அளவிற்கு கடந்த ஞாயிறு, திங்கள் இரண்டு தினங்களில் சென்னையில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீர் இன்றளவும் வடியாமல் உள்ளது. மேலும் நிவாரண பணிகள் எதுவும் நடைபெறவில்லை என மக்கள் அரசின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர் இதுதான் உங்களது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளா? என வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிப்பில் அரசு மீது முன்வைக்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் கூர்மையாக அறிவாலய தரப்பை கிழித்து வருகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நேரடியாக மத்திய அரசிடம் நிதி கேட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதினார். ஆனால் அதற்கு முன்பாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டறிந்தும் அதற்கான நிவாரண நிதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் சென்னைக்கு வருகை புரிந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். ஆய்விற்காக சென்னைக்கு வந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரை தமிழக முதல்வர் நேரில் சென்று சந்தித்து சென்னையை மீட்பதற்கான நிவாரண நிதியை கேட்டு கோரிக்கையை முன் வைத்தார். இதனை அடுத்து  மத்திய அரசு தரப்பில் சென்னை நிவாரண பணிக்காக 1101.29 கோடி ரூபாயை ஒதுக்கி சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி என்ற அறிவிப்புகள் வெளியானது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்ததை அடுத்து, கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்றாவது மிகப்பெரிய வெள்ள பாதிப்பை தற்போது சென்னை கண்டுள்ளது. மழை பொழிவின் அளவு அதிகமாக இருந்த காரணத்தினால் நகரங்களுக்குள் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். 

செயல்பாடுகளின் அணுகுமுறை வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் தனிப்பு நிதியின் கீழ் 561.29 கோடி ரூபாயும் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்காக 450 கோடியையும் மத்திய அரசு விடுத்துள்ளது. இந்த வெள்ள தடுப்பு திட்டமானது இனி வெள்ளத்தில் தாங்க கூடிய மாநகரமாக சென்னையை மாற்ற உதவும்  என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுக எம் பி யான டி ஆர் பாலுவிடம், அமித்ஷா காரராக இந்த நிதியானது முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளை பாதிப்பு என சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தகவல்கள் ஏதேனும் வந்தால் அதற்கு பிறகு உள்துறை அமைச்சகம் இறங்கி எடுக்கும் நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கும் என எச்சரித்துள்ளாராம் இதனால் அறிவாலயம் ஆடி போய் உள்ளது என தகவல்கள் கசிந்துள்ளது.. மேலும் இந்த நிதி விவகாரத்தை டெல்லி மேலிடம் தனியாக டீம் வைத்து விசாரிப்பதாகவும் வேறு சில தகவல்கள் கசிந்துள்ளது அறிவாலயத்தை நடுங்க வைத்துள்ளது.