24 special

பச்சோந்தியே பரவாயில்லை...பிரபல நடிகரை தாக்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி!

Eps, Kamahassan
Eps, Kamahassan

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை வெள்ளத்திற்கு பதில் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, அரசை குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை என தெரிவித்தார் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சகர்களும் கமல்ஹாசனை விமர்சித்துள்ளனர்.


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் போன்ற இடத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் நிவாரண பொருட்களை கொடுத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் “எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வந்தததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை. கோவிட் காலத்தில் கூட என் வீட்டை கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக கொடுக்க முன்வந்தேன். ஆனால் இது கரோனா தொற்று பாதித்த வீடு என்று ஒட்டிச் சென்றுவிட்டார்கள். எனவே இடைஞ்சல்கள் எங்களுக்கு புதிதல்ல. இந்தப் பேரிடர் காலகட்டத்தில் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு உதவ வேண்டும். அரசை பிறகு விமர்சித்துக் கொள்ளலாம். என தெரிவித்தார். ஏற்கனேவ அதிமுக ஆட்சி காலத்தில் மழை வெள்ளம் வந்தபோது ட்வீட் மூலம் அதிமுக அரசை விமர்சனம் செய்த கமல் ஹாசன் இப்போது எவ்வளவு முன்னெச்சரிக்கை செய்தாலும் இயற்கையை கட்டு படுத்த முடியவில்லை என தெரிவித்திருந்தார். ஏன் ஆண்டவர் இப்படி மாற்றி மாற்றி பேசுறீங்க என விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் அரசியல் விமர்சகர்கள் ஒரு எம்பி சீட் வேண்டும் என்பதற்காக மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என விமர்சனம் செய்த்தனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கமல் ஹாசனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசனை தான் ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை என்றார். எதிர்வரும் நாடாளுமன்றத்தில் திமுக ஆதரவில் எம்.பி. ஆக. கமல் முயற்சிப்பதாக எடப்பாடி விமர்சித்தார். மேலும், பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் என்று கூறிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே இருப்பதாக சாடினார். இவரின் பேச்சுக்கு திமுக கட்சியில் இருக்கக்கூடிய கூட்டணிகள் மக்களை கண்டு கொள்ளாமல் அரசியல் வாழ்க்கைக்காக தங்களை பச்சோந்தியாக மாற்றி கொண்டு விட்டனர் என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.