சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக பேசிய திருமா...!ஆனா தேர்தல்ல ஒன்னு இல்லாம போச்சேக ர்நாடகவில் வேலை செய்ததா திருமா பவர்...!விசிகவினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஊரே தீபாவளி கொண்டாடும் நேரத்தில் ஒருவர் மட்டும் சோகமாக இருக்கிறார் என திருமாவளவன் நேரடியாக சென்று களத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சௌமியா ரெட்டியை விமர்சனம் செய்து வருகின்றனர் பாஜக ஆதரவாளர்கள்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது, பாஜக கடந்த சட்ட மன்ற பொதுதேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை காட்டிலும் 39 இடங்களை இழந்து இருக்கிறது, லிங்ககாயத்துகள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் கடந்த முறை 40 இடங்களை கைப்பற்றிய பாஜக இந்த முறை 20 இடங்களை இழந்து இருக்கிறது.
இப்படி பாஜகவிற்கு கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் இறங்கு முகமாக இருந்தாலும் நம்பிக்கை அளிக்கும் விஷயமாக ஒன்று இருக்கிறது, அது பாஜக 2018-ம் ஆண்டு வாங்கிய 36% வாக்கு வங்கியை தக்க வைத்து இருக்கிறது. இவை பாஜகவிற்கு சாதகமான சூழல் எனும் நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மற்றொரு சம்பவமும் அரங்கேறி வருகிறது.
விசிக ஆதரவாளர்கள் மற்றும் விசிக ஆதரவு சமூக வலைத்தள பக்கங்கள் கர்நாடக மாநில பாஜக தோல்வியை பெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அண்ணாமலையை கர்நாடக மாநில பொறுப்பாளராக போட்டு என்ன நடந்தது, இது தான் தமிழகத்தில் நடக்கும் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர்.
இந்த சூழலில் தான் திருமாவளவன் கர்நாடக மாநிலத்தில் நேரடியாக சென்று சௌமியா ரெட்டி என்பவருக்கு நேரடியாக பிரச்சாரம் செய்தார், தமிழர்கள் சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக வாக்கு அளிக்கவேண்டும், விடுதலை சிறுத்தைகளும் உடன் நிற்கும் என தமிழில் வாக்கு சேகரித்தார் திருமாவளவன்.
இந்நிலையில் சௌமியா ரெட்டி போட்டியிட்ட ஜெயன் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் CK ராமமூர்த்தியிடம் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பெரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் இரண்டாவது முறையாக வாக்கு எண்ணிக்கை என அரங்கேறிய ஜெயன்நகர் தொகுதியில் இறுதியில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திருமாவளவன் பிரச்சாரம் செய்த காரணத்தால் தான் சௌமியா ரெட்டி தோல்வி அடைந்தாரா மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் திருமாவளவன் ஆதரித்து பிரச்சாரம் செய்த வேட்பாளர் அதிலும் அமைச்சரவையில் இடம்பெற கூடிய அளவிற்கு பேசப்பட்ட சௌமியா ரெட்டி 16 வாக்குகளில் தோல்வி அடைய திருமாவளவன் தான் காரணம் அவர் பிரச்சாரம் செய்யாமல் இருந்து இருந்தாலே சௌமியா வெற்றி பெற்று இருப்பார் என அண்ணாமலையை விமர்சனம் செய்த விசிகவினருக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மொத்தத்தில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடும் நேரத்தில் திருமா நேரடியாக களத்தில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சௌமியா 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருப்பது தற்போது விசிகவினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.