24 special

அயோத்தியில் பத்தாண்டுகளாக சர்ச்சைக்குரிய நிலமாக இருந்த இடம் ராமர் கோவிலுக்கு சொந்தமானது என்று அடியில் என்ன இருந்தது என போட்டு உடைத்த இஸ்லாம் ஆராய்ச்சியாளர்!

k muhamad, ayothi kovil
k muhamad, ayothi kovil

 1500 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி முன்னரே குழுவில் இருந்த பகுதியில் கட்டப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்து பத்து ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தது அயோத்தியில் இருந்த அந்த சர்ச்சைக்குரிய இடம்! அதற்குப் பிறகு நீதிமன்ற வழக்குகளை சந்தித்த அந்த சர்ச்சைக்குரிய இடம் அகழாய்விற்கு உட்படுத்தப்பட்டது,, அந்த அகழாய்வில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கேகே முகமது என்பவரும் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளராக இருந்தார் நீதிமன்றமே அந்த சர்ச்சைக்குரிய இடம் ராமர் கோவிலுக்கு சொந்தமானது என்பதை தீர்ப்பாக அறிவிப்பதற்கு முன்பாகவே தனது முதல் அறிக்கையின் மூலம் பாபர் மசூதி ஒரு கோவிலுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து நாடு முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். 


எந்த ஒரு ஆதாரத்தை வைத்து ஒரே ஒரு அகழ்வாராய்ச்சி மூலம் எப்படி அவர் இந்த ஒரு முடிவிற்கு வந்து அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறித்த சுவாரசிய தகவல்களை தற்பொழுது தனியார் பத்திரிகை நிறுவனத்திடம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் முன்னால் தொல்லியல் ஆராய்ச்சியாளர் முகமது, நாங்கள் மசூதிக்குள் சென்ற பொழுது ஹிந்து கோவில் தூண்கள் மீது மேல் மசூதி நிற்பதை நாங்கள் கண்டோம் அந்த தூண்களின் அடிப்பகுதியில் பூரண கும்ப கலசங்களும் செதுக்கப்பட்டிருந்தது. இந்துக்களின் எட்டு மங்கள அடையாளங்களில் ஒன்றாக பூரண கும்ப கலசம் விளங்குகிறது, மேலும் அங்கு சிதலமடைந்த சிலைகளையும் தூண்களுக்கு கீழ் செங்கலால் கட்டப்பட்ட அடித்தளத்தையும் கண்டு மற்றும் சில சுடுமண் சிலைகளையும் கண்டறிந்தோம் இவை அனைத்தும் கோவில்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது ஆனால் மசூதியில் கிடைக்காது! 

இதுபோன்ற ஆதாரங்களை வைத்து இந்த இடத்தில் முன்பு ஒரு கோவில் இருந்தது என்பதை உறுதி செய்தோம், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன் நான் வலுவான மத நம்பிக்கையை கொண்டது இஸ்லாம், அதனால் இயல்பாகவே நான் பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது! என்னுடைய அறிக்கையை 1999 இல் நான் வெளியிட்டேன் அப்படி வெளியிடும் பொழுது நான் சென்னையில் இருந்தேன் அப்பொழுது எனது அலுவலக தொலைபேசி மூலமாகவும் பல வழிகளிலும் எனக்கு மிரட்டல்கள் வந்தது இப்பொழுதும் சில மிரட்டல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது! ஆனால் ஒரு தொல்லியல் ஆய்வாளர் எப்போதும் யாருக்கும் சார்ந்து பேசக்கூடாது உன்னை பக்கமே நிற்க வேண்டும் நீங்கள் இந்துவா முஸ்லிமா கிறிஸ்தவரா என்பது முக்கியமல்ல அறிவியல் பூர்வமாக என்ன சான்றுகள் கிடைக்கிறதோ அதை மட்டுமே கூற வேண்டும், அதனால் அறிவியல் சான்றுகள் படியே நான் நடந்து கொண்டேன் என்று பதில் அளித்தார் முகமது. 

மேலும், இஸ்லாம் மற்றும் இந்து மக்களுக்கு எனது அறிவுரை அயோத்தி, மதுரா மற்றும் ஞானவாபி இந்த மூன்றுமே இந்துக்களுக்கு மிக முக்கியமான பகுதிகள் எப்படி இஸ்லாமியருக்கு எப்படி மதினா மக்கா இருக்குதோ அதேபோன்றுதான் இவர்களுக்கு இந்த பகுதிகள் அனைத்தும் மிக முக்கியமானது அதை அவர்கள் கேட்பது நியாயமானது! அதனால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் அவர்களை முன்வைத்து இந்த பகுதிகளில் கோவில் கட்டுவதற்கு அனுமதிகளை வழங்க வேண்டும். பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டு ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கூறியதோடு எதிர்க்கட்சி தரப்பில் அயோத்தி கோவிலுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டும் மறுக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது அதற்கு முகமது அவர்கள் எதிர்க்கட்சி தரப்பினரும் இந்த அயோத்தி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று தெரிவித்து மசூதி இருந்த இடத்தில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டிற்கு எடுத்துரைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கியுள்ளார் முன்னாள் தொல்லியல் ஆராய்ச்சியாளர் கே முகமது!