ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால், இந்த பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷியா, இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த 5 நாடுகளுக்கும் சிறப்பு உரிமைகள் உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்யும் வகையில் வீட்டோ எனப்படும் உரிமை இந்த 5 நாடுகளுக்கும் உள்ளன.. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகின்றன.
193 உறுப்பு நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஆறு உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளை மேம்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
ஐநா சபையின் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா முயற்சித்து வருகிறது ஆனால் அது வெற்றிபெறவில்லை. இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகை, வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அணுசக்தி கொண்ட நாடாக இருந்தாலும், ஐநாவின் நிரந்தர பட்டியலில் உறுப்பினராக இல்லை. இந்தியய இந்த பட்டியலில் இடம்பெற வைத்த கோரிக்கையானது, உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இந்தியா சமீபத்தில் அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்தியா மக்கள்தொகை அடிப்படையில் இரண்டாவது பெரிய நாடு மற்றும் உலகின் மிகப்பெரிய தாராளவாத ஜனநாயகம்.நாடு வாங்கும் சக்தி சமநிலையில் உயர்ந்த இடத்தில் உள்ளது மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் பெரும் பங்களிப்பாளராக உள்ளது. முன்வைத்தது ஆனால் இந்தியாவிற்கு ஆதரவாக மற்ற நாடுகள் வாக்கு கொடுக்கவில்லை.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எதிராக வர்த்தகத்தில் பிரச்னை எழுந்து வருகிறது மற்றும் இந்தியா எல்லைக்குள் சீனா நுழைந்து வருவதால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் வேண்டும் கூறப்பட்டு வருகிறது. இந்தியா உலகிலேயே சிறந்த மற்றும் அமைதியான நாடாக இருந்தாலும். ஆனால் சில பழைய செயல்களால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை இந்தியா எதிரிகளாகப் பெற்றுள்ளது. சமீபத்தில் கூட இந்திய கனடா உறவு பாதிப்படைந்தது. காலிஸ்தானியர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்திய போது கனடாவுக்கு இந்தியாவும் இந்தியாவுக்கு கனடாவுக்கு சிக்கல் கொடுத்து வந்தது.
இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்க் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என இணையத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். " ஐநாவின் தற்போதைய அமைப்பு உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடுகளை போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, ஐ.நா., அமைப்புகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். பிரச்னை என்னவென்றால், அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடான இந்தியாவுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இருக்கை வழங்கப்படாதது அபத்தமாக உள்ளது. என பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கொண்டுவர மஸ்க் முனைப்பு காட்டி வரும் நிலையில், தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க் தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியாவை சேர்த்துக்கொள்ள ஆதரவு தெரிவித்தது, பிற நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது என பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், உலக பணக்காரரான எலான் மஸ்க் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது சீன போன்ற நாடுகளுக்கு பெரும் பதற்றத்தை கொடுத்துள்ளது.