24 special

முடிந்தது ராமர் கோவில் திருவிழா அடுத்தது நடக்கப்போகும் மிகப்பெரிய அரசியல் சம்பவம்...

udhayanithi, modi
udhayanithi, modi

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்காக கட்டப்பட்டிருந்த கோவில் பிரம்மாண்டமாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா உடன் திறக்கப்பட்டது. இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில் கும்பாபிஷேக விழாவிற்கு அடுத்த நாளிலிருந்து பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்ட அடுத்த நாளே அயோத்தி கோவிலில் கூட்டம் அலைமோதியுள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததாகவும் அதனால் காலை ஏழு மணி முதல் 11.30 மணி வரை முதல் தரிசனத்திற்கு கோவில் திறக்கப்பட்டதாகவும், அந்த முதல் தரிசனத்தில் முன்பதிவு செய்த முப்பது பேருக்கு மட்டுமே தீபா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த வரலாற்று நிகழ்விற்காக மத்திய அரசு பலவகை ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க அதாவது கோவில் நிர்வாகத்தின் தரப்பில் நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் என பலருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது மேலும் நாடு முழுவதிலும் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேக விழாவில் பயன்படுத்தப்பட்டது. 


2019 இறுதியில் இருந்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அயோத்தி ராமர் கோவில் தற்போது ஒரு முழு உருவம் பெற்று பிரம்மாண்டமாக காட்சியளிப்பது உலக மக்கள் அனைவராலும் வரவேற்பையும் ராமர் கோவிலுக்கு சென்று ஒரு முறையாவது ராமனை பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தையும் கிளப்பி உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவும் தன்னால் முயன்ற பல உதவிகள் மற்றும் வேலைகளை செய்ததாகவும் பாஜக தலைமையில் இருந்து கூறப்படுகிறது. இதனை அடுத்து பல ஆண்டுகளான வரலாற்று சாதனை தற்போது நிகழ்ந்துவிட்டது ஆதலால் இனி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முழு வீழ்ச்சியுடன் இறங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேக விழா முடிந்த அன்றைய தினமே பாஜகவின் முக்கிய தலைவர்களை அழைத்து பேசியதோடு சில முக்கிய தகவல்களை அனுப்பியுள்ளார் தேர்தலில் முழு கவனம் செலுத்த வேண்டும் 400 தொகுதிகளை நாம் இலக்கு வைத்து அதில் வெற்றி அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார் பிரதமர்! இதற்காகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயோத்தி ராமர் கோவில் குறித்து பேசிய கருத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து பிஜேபியின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதுமட்டுமின்றி அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா மற்றும் திறப்பு விழாவை முன்னிட்டு உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் முழு நேர பொது விடுமுறை அறிவித்தது மேலும் திரிபுரா, ஒடிசா, குஜராத், அசாம் போன்ற மாநிலங்களுக்கு அரைநாள் பொது விடுமுறையும் அறிவித்ததோடு மக்கள் அனைவருக்கும் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது. மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் நாடு முழுவதும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திமுக அரசு அன்று அரை நாள் விடுமுறை கூட விடவில்லை கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பும் செய்ய ஏற்பாடு செய்யவில்லை! இதனால் திமுக அரசின் மீது டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிகிறது, இதன் காரணமாகவே அரசியல் ரீதியில் திமுகவிற்கு பல பின்னடைவுகள் ஏற்படும் குறிப்பாக பாஜக இதுவரை செய்ததை விட இன்னும் அதிக வீரியத்துடன் அரசியல் செய்யும், திமுகவை எதிர்த்து பாஜக அதிக களமாடும் என தகவல்கள் கசிந்துள்ளது.