24 special

பிஜேபியின் பி டீமா காங்கிரஸ்..? முன்னாள் முதல்வர் பகீர் குற்றசாட்டு..!


கர்நாடகா : கர்நாடக மாநிலத்தில் இருந்து நான்கு ராஜ்யசபா சீட்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பிஜேபி ஆகியவை தங்கள் வேட்பாளர்களை களமிறக்கின. இந்த தேர்தலில் காங்கிரஸ் குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி குமாரசாமி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.


தேர்தல் குறித்து சித்தராமையா கூறுகையில் " கட்சி மேலிடம் தேவகவுடாவை பிரதமராகவும் 2020ல் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆக்கி அழகு பார்த்தது. தற்போது போதிய வாக்குகள் இல்லாவிட்டாலும் தங்களுக்கான வேட்பாளர்களை நிறுத்த மதசார்பற்ற ஜனதா தளம் எடுத்த முடிவு  காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. 

மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் பிஜேபியின் வெற்றிகள் மத சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இருக்கும். நான் ஜே டி எஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்னும் தொடர்பில் உள்ளேன். அவர்கள் எங்களுக்காக வாக்களிப்பார்கள்" என கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை கிண்டலடிக்கும் விதமாக குமாரசாமி கூறிய கருத்துக்கள் சர்ச்சையாகி வருகிறது.

மேலும் குமாரசாமி " சீனிவாச கவுடா காங்கிரசுக்கு வாக்களிப்பார் என நினைத்திருந்தேன். ஆனால் எங்கள் கட்சி  எம்.எல்.ஏ வான எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் காங்கிரசுக்கு வாக்களிப்பார் என நினைக்கவில்லை. காங்கிரஸ் இன்று தனது உண்மை முகத்தை வெளியே காட்டிவிட்டது. காங்கிரஸ் தான் பிஜேபியின் பி டீம். நாட்டில் பிஜேபியின் வரலாறு காணாத எழுச்சிக்கு காங்கிரஸ் மட்டுமே காரணம்.

இந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளது. தனது வெற்றிக்காக குறுக்குவழியில் எங்கள் உறுப்பினரையே வாக்கை மாற்றிப்போட வைத்துவிட்டது" என நேற்று செய்தியாளர்களிடம் குமாரசாமி தெரிவித்துள்ளார்.