24 special

பரபரப்பாக முடிந்த ராஜ்யசபா தேர்தல்...! செல்லாத காங்கிரஸ் வாக்கு..?


புதுதில்லி : ஹரியானா மாநில ராஜ்யசபா தேர்தல் நேற்று மாலை ஐந்து மணிக்கு முடிவடைந்தது. இரண்டு இடங்களுக்கான இந்த தேர்தலில் காங்கிரசின் இரண்டு வாக்குகள் செல்லாது என அறிவிக்க கோரி பிஜேபி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது ஹரியானாவில் பரபரப்பை உருவாக்கியது.


நேற்று மாலை ஐந்து மணிக்கு கடைசி வாக்குப்பதிவு முடிந்தவுடன் பிஜேபி மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, கஜேந்திரசிங் ஷெகாவத் மற்றும் ஜிதேந்தர் சிங் பிரதிநிதிகள் கொண்ட குழு தேர்தல் அதிகாரியை சந்தித்தது. அப்போது தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கிரண் சௌத்ரி மற்றும் பத்ரா ஆகியோரின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கக்கோரி புகார் அளித்தனர்.

அதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரி சிங் " வீடியோவை நான் பார்த்தேன். மிக உன்னிப்பாக கவனித்தேன். வாக்குசீட்டின் தனியுரிமையோ அல்லது ரகசியமோ மீறப்படவில்லை. இதில் எந்தவொரு விதிமீறலும் இல்லை என்பதை தெரிந்துகொண்டேன்" என தேர்தல் அதிகாரி கூறியதுடன் புகார் மனுவையும் நிராகரித்தார், மேலும் சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான 90 பேரில் 89 பேர் வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிஜேபி எம்.எல்.ஏவான பால்ராஜ் குண்டு வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. பிஜேபி சார்பில் முன்னாள் அமைச்சர் க்ரிஷன் லால் பன்வார்  மற்றும் காங்கிரஸ் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மகானும் களமிறங்கினர். மீடியா பெர்சனாலிட்டியான கார்த்திகேய சர்மா பிஜேபியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டார். அதேபோல ராஜஸ்தானிலும் இன்று ராஜ்யசபைஆ தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

ராஜஸ்தானில் நடந்த ராஜ்யசபா சீட்டுகளுக்கான போட்டியில் காங்கிரஸ் மூன்று இடங்களை வென்றுள்ளது. பிஜேபி ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல மிகவும் எதிர் பார்க்கப்பட்ட வேட்பாளரான ஜீ டிவி நிறுவனர் சுபாஷ் சந்திரா இந்த தேர்தலில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சுபாஷ் சந்திரா சுயேச்சையாக நின்றபோதும் பிஜேபி ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.