24 special

சந்திக்க தயார் பாஜக ஓபன் சேலஞ்..! குவியும் இரு தரப்பினர் சற்று நேரத்தில் என்ன நடக்க போகிறது?

annamalai
annamalai

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம்  இன்று (19/04/22) ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க உள்ளார்.


ஆளுநரின் ஆதின வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக,  தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்ற அக்கட்சியினர் ஆதீன குருமகா சந்நிதானம் இல்லாததால் ஆதீன நிர்வாகத்தில் மனுவை ஒப்படைத்தனர்.

அந்த மனுவில், மத்திய அரசின் தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுக்கு எதிராக செயல்படுவதற்காக தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, சட்டப்பேரவைiயில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தீரமானங்களுக்கும் ஒப்புதல் தர மறுத்து, தொடர்ந்து கிடப்பில் போட்டு வருகிறார் எனவே அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவது தவறானது எனவும் ஆளுநர் வருகையை ரத்து செய்யவேண்டும் என குறிப்பிட்டனர்.

அதையும் மீறி ஆளுநரை அழைத்து நிகழ்ச்சியை தொடங்கினால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்தனர், இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். திருவாடுதுறையில் ஆளுநரை திமுக தடுத்தால், பாஜக களமிறங்குவோம். திருவாடுதுறைக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது, லார்டு மைண்ட்பேட்டன் கையிலிருந்து சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிக்கு பவர் (அதிகாரம்) மாறிய போது, கொடுக்கப்பட்ட செங்கோல் - திருவாடுதுறை ஆதீனத்திடமிருந்து கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் Power Transferஇல் தமிழகத்தின் அடையாளம் அங்கே உள்ளது. அந்த செங்கோல் பாராளுமன்ற மியூசியத்தில் உள்ளது. தேசியத்துக்காக, நம் நாட்டுக்காக வாழ்ந்த ஆதீனம் அது. அங்கே கவர்னர் செல்வதை  திமுகவும் அதன் கூட்டணிகளும் தடுத்து நிறுத்தினால், விளைவு நிச்சயமாக இருக்கும். கவர்னருக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது.

ஆனால், ஒரு கட்சியாக நீங்கள் (திமுக ) தடுத்து நிறுத்தினால், பாஜக கவர்னரை வரவேற்க அங்கே இருக்கும். அதில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும், முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை. ஆளுநர் தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் சூழலில் பாஜக மற்றும் எதிர் தரப்பினர் குவிந்து வருவதால் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.