தமிழ் திரைப்படங்கள் மீது தமிழ் ரசிகர்களே கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியது முன்னணி நடிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தற்போதைய நடிகர்களின் போக்குகள் மற்றும் ஒரு சில இயக்குனர்களின் செயல்பாடு காரணமாக மிகவும் மோசமடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால் தற்போது பாலிவுட் திரைப்படம் மற்றும் அதன் நடிகர்களுக்கு என்ன கெதி ஏற்பட்டதோ அதே கதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது, தென் இந்தியா என்றால் கடந்த காலங்களில் தமிழ் சினிமாவே முதலிடம் பிடிக்கும். பாம்பே திரைப்படம் தொடங்கி எந்திரன் வரை பாலிவுட் வரை சென்று புகழ் சேர்த்தது தமிழ் சினிமா.
தற்போது அந்த இடத்தை தெலுங்கு சினிமா பிடித்துள்ளது, மேலும் இதுநாள் வரை கால் பதிக்காத கன்னட சினிமாவும் "KGF" திரைப்படம் மூலம் பெரும் வெற்றியை சாதித்துள்ளது இதற்கெல்லம் காரணம் அந்த திரைப்படங்கள் அரசியல் பேசாததும், இந்தியாவின் கலாசாரமான இந்து மதத்தை முன்னிலை படுத்தியதும் தான் காரணம் என கணக்கிட்டுள்ளனர்.
இதையடுத்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி போன்றோர் இனி எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தெளிவான திரைப்படங்களை தேர்ந்து எடுத்து மீண்டும் தங்கள் இடத்தை பிடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம், அஜித், சிவகார்த்திகேயன் இன்னும் பிற நடிகர்கள் தங்கள் படத்தில் அரசியல் சார்பு அல்லது எந்த சமூகத்தையும் சர்ச்சைக்கு உள்ளாக்காமல் நடிப்பது போன்று பிற நடிகர்களும் முன் வந்தால் தமிழ் சினிமாவை மீண்டும் முன்னணி இடத்திற்கு கொண்டுவரலாம் என தமிழக திரை துறை முடிவு செய்துள்ளதாம்.
தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போவதற்கு சமீபத்திய மோடி எதிர்ப்பு கொள்கையே காரணம் என கண்டறிந்து அதனை மாற்ற முடிவு செய்து இருக்கிறார்களாம். தமிழக திரை துறையினரின் இந்த புது முடிவு இதுநாள் வரை தமிழ் சினிமாவை ஆயுதமாக பயன்படுத்தி வந்த திராவிட ஸ்டாக்ஸ் தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.