டெல்லியில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஊர்வலமாக சென்ற மக்கள் மீது மசூதியில் இருந்து கற்கள் எரியபட்டது, மேலும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது, இதில் போலீசார் உட்பட பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்தனர் இதையடுத்து பதற்றமான சூழல் உண்டான நிலையில் இஸ்லாமிய பிரிவுகளை சேர்ந்த 14 நபர்கள் கைது செய்யபட்டனர்.
மேலும் பலரை தேடி வந்தனர் இந்த சூழலில் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் குற்றங்களை கருத்தில் கொண்டும் கலவரத்தை கருத்தில் கொண்டும் பல நபர்களை நாடு கடத்தும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற வழிவகை செய்து வருவதாக செய்திகள் வெளியானது, அத்துடன் கலவரத்தில் ஈடுபட்ட 70 மேற்பட்ட மக்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இவர்களை டெல்லி காவல்துறை கடத்தி சென்று இருக்கலாம் என்றெல்லாம் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்டவர்கள் தரப்பு குற்றம் சுமத்தியது, இந்த சூழலில்தான் அங்கே மாற்றம் நிகழ்ந்துள்ளது , இந்நிலையில், ஜஹாங்கிர்புரியிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள உத்தம் நகரில் மறுநாளான ஹனுமன் ஜெயந்தியான ஞாயிற்றுக்கிழமை பஜ்ரங் தளம் அமைப்பினர் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து இப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி தொடங்கி அமைதி நிலவுகிறது.இந்நிலையில், இவற்றுக்கு நேர்எதிரான காட்சிகளை டெல்லியின் மங்கோல்புரி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் காண முடிந்தது. இந்த ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் நுழைந்த போது அங்குள்ள மாடி வீடுகளிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலத்தினர் மீது பூமழை பொழிந்தனர்.
மசூதிகளின் மேல் தளத்திலும் முஸ்லிம்கள் ஊர்வலத்தில் பூக்களை வீசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சாலை ஓரங்களிலும் பல முஸ்லிம்கள் கும்பலாக நின்று ஊர்வலத்தினர் மீது பூக்களை தூவினர். ஒரு சிலர் பாரத் மாதகி ஜெய் என்று முழக்கமிட்டனர்,
இஸ்லாமியர் சமூகத்தின் இந்த திடீர் மன மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது ஒன்று பெரும்பான்மை மக்களின் வெறுப்பை சம்பாரிப்பது எதிர்காலத்திற்கு நல்லது இல்லை என நினைத்தது மற்றொன்று மத்திய அரசு கற்களை எறிந்தவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் அல்லது புல்டோசர் மூலம் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை போன்று அதிரடியில் ஈடுபடலாம் என்பதால் ஒரு தரப்பு ஆதரவாக மாறியுள்ளாதாக கூறப்படுகிறது.