
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த Evks இளங்கோவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் H. ராஜா ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார் அரசியல் நாகரீகம் இன்றி ஒருமையில் விமர்சனம் செய்து இருந்தார். இந்த சூழலில் பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி EVKS இளங்கோவனுக்கு அவர் மொழியிலேயே பதிலடி கொடுத்தார், இந்த சூழலில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட. தலைவர் டாக்டர் சரவணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அதில், EVKS இளங்கோவன் எங்கள் தலைவரை விமர்சனம் செய்துள்ளார் அவர் மதுரையில் கால் வைக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சரவணன், மதுரையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கால் வைக்க முடியாது என மதுரை மாநகர பாஜக சார்பில் அறிவிக்கிறேன், சூர்யாவின் ஜெய்பீம் பட விவகாரத்தில் சர்ச்சை எழுந்தபோது கூட சொன்னார்கள் நடிகர் சூர்யாவை ஏதோ பண்ணினால் ஒரு லட்சம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டார்கள், அதை நான் பண்ண வேண்டுமா என்று கூட ஈவிகேஎஸ் இளங்கோவன் நக்கலாக பேசுகிறார்.
இதையே நாங்களும் சொல்லலாம், ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரைக்கு வந்தால் அதை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம் என மதுரை மாநகர பாஜக சார்பில் அறிவிக்கிறோம் எனவும் அதிரடியாக குறிப்பிட்டுள்ளார் சரவணன், மேலும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மதுரை மீனாட்சி பேருந்து நிலையம் என மாற்றுவதில் தவறு இல்லை பலர் தங்களது பெயர்களை கூட மாற்றியுள்ளனர் முதல்வர்கள் கூட தங்கள் பெயர்களை மாற்றி இருக்கின்றனர்.
எனவே மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மீனாட்சி பேருந்து நிலையம் என மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் சரவணன். வாயை கொடுத்து வம்பில் சிக்கிய evks இளங்கோவன் என்ன பிரச்னையை சந்திக்க போகிறார் என மதுரையில் கால் வைத்தால்தான் தெரியவரும்.