
ஜான் பாண்டியன் தனியார் யூட்டியுப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது, குறிப்பாக சூர்யா மற்றும் அவரது தந்தை குறித்தும் ஜெய்பீம் திரைப்படம் குறித்தும் மிக பெரிய அளவில் பல்வேறு சம்பவங்களை சுட்டி காட்டி பதில் அளித்து இருக்கிறார் ஜான் பாண்டியன்.
பேட்டியின் போது ஆமாம் சிவகுமார் சாதி வெறியர்தான் அவரை போன்றுதான் அவரது மகன் சூர்யாவும் இருப்பார் ஜோதிகாவை திருமணம் செய்வதாக சூர்யா முடிவு செய்தபோது என்னென்ன வேலை செய்தார் சிவகுமார் அதன் பிறகு அவரது இளைய மகன் கார்த்திக்கு கவுண்டர் வீட்டு பெண்ணை பார்த்து திருமணம் செய்யவில்லையா?
எனக்கு நல்ல நண்பர்கள் கவுண்டர் சமுதாயத்தில் இருக்கிறார்கள் ஆனால் சிவகுமார் வேறு ரகம், திரையில் ஒன்றாகவும் நேரில் ஒன்றாகவும் இருக்கிறார்கள் என்னிடம் விமான நிலையத்தில் சாதிய உணர்வுடன்தான் நடந்து கொண்டார் சிவகுமார், திரையில் ஜெய்பீம் என வைத்ததே தவறு அந்த படத்தில் எங்காவது அம்பேத்கரை உயர்த்தி பேசி இருக்கிறாரா? இல்லையே?
வன்னியர்களை தவறாக காட்சி படுத்தினால் படத்திற்கு விளம்பரம் காசு கிடைக்கும் அதனால் அவ்வாறு செய்கிறார்கள் எங்கே மறுக்க சொல்லுங்கள் சிவகுமாரை நான் சாதி வெறியன் இல்லை என்று சொல்ல சொல்லி முடியுமா? என பல்வேறு சம்பவங்களை சுட்டி காட்டி அதிரடியாக பேசியிருக்கிறார் ஜான் பாண்டியன்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, மேலும் பலரும் ஜான் பாண்டியன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சிவகுமார் குடும்பம் விளக்கம் தெரிவிக்க வேண்டும் எனவும் ஏன் விமான நிலையத்தில் ஜான் பாண்டியனிடம் அவ்வாறு சிவகுமார் கூறினார் என விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :