Politics

#Breaking திருநெல்வேலியில் வாக்கு எண்ணிக்கையில் அதிரடி மாற்றம் பாஜக வேட்பாளர் நைனார் அதிரடி !!

#Breaking திருநெல்வேலியில் வாக்கு எண்ணிக்கையில் அதிரடி மாற்றம் பாஜக வேட்பாளர் நைனார் அதிரடி !!
#Breaking திருநெல்வேலியில் வாக்கு எண்ணிக்கையில் அதிரடி மாற்றம் பாஜக வேட்பாளர் நைனார் அதிரடி !!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.


மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதிகாலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதன்பின்னர், வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தற்போதைய கள நிலவரப்படி பாஜக மூன்று தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, தாராபுரம், திருநெல்வேலி, ஊட்டி, இதில் திருநெல்வேலி தொகுதியில் தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகிறார், திமுக கூட்டணி வேட்பாளரை காட்டிலும் 1007 வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.