24 special

பொள்ளாச்சி மக்களை கவர்ந்து வரும் பாஜக வேட்பாளரின் பிரச்சாரம்...!

Vasantha Rajan, MK Stalin
Vasantha Rajan, MK Stalin

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சி பாராளுமன்றத்தின் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரின் பிரச்சார செயல்படுகளை கண்டு திமுக வாயடைத்து பொய் விட்டனர் என்றே சொல்லலாம். 


                                                                          

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தொடங்க சரியாக பத்து நாட்கள் உள்ள நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் சைலண்டாக காய் நகர்த்தி வருகிறார். யூடியூபில் வெளியாகும் கருத்து கணிப்பில் கூட இவரது வெற்றி குறித்து யாரும் பெரியதாக விவாதிப்பதில்லை. மேலும், வசந்தராஜன் யார் என்று கூட தெரியவில்லை என கூறுகின்றனர். ஆனால், களத்தில் வசந்தராஜன் தீவிர வாக்கு சேகரிப்பிலும் மக்கள் இடத்தில் ஒரு நல்ல பெயரை பெற்றுள்ளார் வசந்தராஜன்.

                                                                                        

கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக இருந்த வசந்தராஜன், நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னரே அந்த தொகுதியில் இருக்க கூடிய பல பிரச்சனைகளை சரி செய்ய முன்வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் பொள்ளச்சி பாராளுமன்றத்திக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்திருக்கிறார். வெளியில் வரமால் பலவேறு திட்டங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் வசந்தராஜன். பொள்ளாச்சியில் போட்டியிடும் இவர் பல்வேறு நல திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறார். இதனால் மக்கள் வசந்தராஜனை தேர்ந்தெடுக்க முன் வந்துள்ளார்களாம்.

                                                                                    

அதேபோல் கடந்தமுறை பொள்ளாச்சி திமுக எம்பியான சண்முகசுந்தரம் என்பவர் தொகுதிக்கு எந்த வித திட்டத்தையும் நிறைவேற்றவில்லை மேலும் வெற்றி பெற்ற பிறகு இந்த பக்கமே வரவில்லை என கூறப்படுகிறது. வசந்த ராஜன் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளதாக மக்கள் கருத்துக்களை தெரிகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபடும் அவர் மக்களிடத்தில் அனல் பறக்க திமுகவின் வாக்குறுதிகளை கூறியும் பொள்ளாச்சிக்கு சொன்ன வாக்குறுதி குறித்தும் மக்களிடத்தில் கூறி வருகிறார்.

                                                                      

இந்த பகுதிக்காக திமுக எம்பி எதாவது செய்தாரா..? பாராளுமன்றத்தில் பேசியிருக்காரா..? வெற்றி பெற்றதற்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதிகள் கொடுத்தீர்கள். நிறைவேற்றவில்லை என்பதால் இந்த முறை திமுக இங்கு வேட்பாளரை நிறுத்தவே கூடாது. விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டது திமுக ஐந்து வருடத்தில் ஒரு மாற்றமும் ஏற்படுத்தாதவர் தான் இந்த திமுக எம்பி. அணைத்து குடும்ப பெண்களுக்கும் 1000 ரூபாய் சொல்லிவிட்டு 30 மாதம் கொடுக்காமல் நாடளுமன்ற தேர்தல் வருவதால் அவசர அவசரமாக ஏற்பாடு செய்து விட்டு தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் கொடுத்து வருகின்றனர். அதிலும், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இலவு படுத்தி பேசுகிறார்.

                                                                           

இப்படி திமுகவின் பொய் வாக்குறுதிகளை பட்டியல் போட்டு ஒவ்வொரு சட்ட மன்றத்திலும் பேசி வருகிறார். மக்களும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், ஊடகத்தில் பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் குறித்து பேச மறுத்து வருகின்றனர் இந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் வெற்றி பெரும் ஒரு தொகுதியில் பொள்ளாச்சியும் சேரும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. மண்ணின் மைந்தனாக வசந்த ராஜன் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.