இன்றைக்கு உள்ள உலகத்தில் திருமணம் என்றால் மிகவும் ஈஸியான விஷயமாக மாறிவிட்டது. சிலர் திருமணம் செய்துவிட்டு கடைசி வரை ஒன்றாக தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இன்னும் சிலர் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே தங்களுக்குள் ஏதாவது ஒரு கருத்து வேறுபாட்டினால் சண்டை போட்டுவிட்டு பிரிந்து செல்கின்றனர். திருமணமான இரண்டு மூன்று வருடங்களிலேயே பிரிந்து செல்லும் தம்பதிகளை பார்த்திருப்போம். ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் பிரியும் தம்பதிகளை பார்த்து என்ன நினைப்பதே என்றே தெரியாமல் சில சமயங்களில் இருந்திருப்போம். அதுபோல தான் 90ஸ் களின் பிரபல ஹீரோவான ஒருவரின் திருமண வாழ்க்கையும் வெறும் ஒரே மாதத்தில் தன் மனைவியை பிரிந்துள்ளார்!! அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா???
90களில் அஜித்தும் விஜய்யும் எந்த அளவிற்கு அதிக அளவில் ரசிகர்களை பெற்றிருந்தார்களோ அதே அளவிற்கு ரசிகர்களை பெற்று வந்தவர்தான் நடிகர் பிரஷாந்த். இவரை தமிழ் சினிமா உலகின் காதல் இளவரசன் என்று அனைத்து ரசிகர்களும் கூறுவார்கள். இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான தியாகராஜனின் மகன் ஆவார். தன்னுடைய 17 வயதிலேயே வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தில் சூப்பராக நடித்து மணியளவில் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். ஆரம்பித்த இரண்டே வருடத்தில் ஐ லவ் யூ என்னும் திரைப்படத்தின் மூலம் குறுகிய காலத்தில் பாலிவுட்டில் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற சிறப்பை பெற்றார். இவர் நடித்த ஜீன்ஸ் என்னும் திரைப்படம் சூப்பராக ஹிட் கொடுத்து அதிக அளவில் வருமானத்தையும் ஈட்டி கொடுத்தது.
இதன் பிறகு அவருக்கு இன்னும் அதிகமாக ரசிகர்கள் வந்தனர். 2000 ஆண்டு வரை மிகவும் முன்னணி நடிகராக இருந்து வந்த பிரசாந்த் தமிழகத்தின் உச்ச நடிகராக திகழ்ந்து கொண்டும், தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்த பிரசாந்த் தற்போது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி அவரின் ரசிகர்கள் அதிக அளவில் இந்த திரைப்படத்தில் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். சோசியல் மீடியாக்களில் இன்றளவும் நல்ல கருத்துக்கள் ஒரு நடிகரை பற்றி எழுந்து வருகிறது என்றால் அது இவரைப் பற்றித்தான் இருக்கும். மேலும் இவர் தந்தை நடித்த மம்பட்டியான் படத்தை ரீமேக் செய்து இவரும் நடித்து வெளிவந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டு கொடுத்தது.
இவ்வளவு சூப்பராக தனது துறை உலகத்தில் நடித்து வந்த பிரசாந்த் இருக்கு திருமண வாழ்க்கை அந்த அளவிற்கு சூப்பராக அமையவில்லை. அவரின் திருமண வாழ்க்கை குறித்து அவரின் தந்தை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நடிகர் பிரசாந்தின் திருமண வாழ்க்கையில் திருமணமான ஒரே மாதத்தில் முடிவிற்கு வந்ததற்காக காரணத்தை அவரின் தந்தை கூறியுள்ளார். அது என்னவென்றால்!! நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது என்று திருமண பதிவு அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணும் திருமணம் ஆன ஒரே மாதத்தில் வீட்டை விட்டு சென்று விட்டாள். அதன் பின் இருவரும் எந்த ஒரு தொடர்பிலும் இல்லை. நாங்கள் வரதட்சணை வாங்கி விட்டோம் என்று நீதிமன்றத்தில் புகார்கள் கொடுத்துள்ளனர். இதனால் நீண்ட நாட்கள் நீதிமன்றத்திற்கு செல்லவும் ஏற்பட்டது. ஆனால் கண்டிப்பாக என்னுடைய மகனுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பது என்னுடைய கடமையாகும் என்று இயக்குனர் தியாகராஜன் கூறியுள்ளார்.