24 special

வெற்றி வாகை சூடும் பாஜக மாவட்ட தலைவர்...! வசந்த ராஜனின் பிண்ணனி..?

Vasantha Rajan
Vasantha Rajan

நாடளுமன்ற தேர்தலுக்காக தமிழக்தில் பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து. தொகுதியில் தீயாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைத்து தொகுதி பங்கீட்டை பிரித்துள்ளது. அந்த வகையில் பொள்ளாச்சி தொகுதியில் பாஜக சார்பாக இரு பெரும் தலைவர்கள் பெயர் அடிபட்ட நிலையில் பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் வசந்த ராஜன் அவர்களுக்கு பாஜக தலைமை நாடாளுமன்ற தேர்தலில் வாய்பளித்துள்ளது. இதில் யார் இந்த வசந்த ராஜன் அவரது செயல்பாடுகள் குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது.


கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக-வின் கோட்டையாகவே இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட எம்பி வெற்றி பெற்றார். ஆனால் அவரது செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. மக்களை விட திமுகவினரே அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த சூழ்நிலையில், திமுக சார்பாக ஈஸ்வரசாமிக்கு இந்த முறை தொகுதி ஒதுக்கியுள்ளது. இதன் பின்னணியில் திமுகவை சேர்ந்த அமைச்சரின் பெயர் அடிபட்டது. அதேபோல் அதிமுக சார்பாக கார்த்திகேயன் என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையில் பாஜக தனது வேட்பாளரை கொங்கு பகுதியில் அறிவித்துள்ளது. கோவை தெற்கு மாவட்ட தலைவராக இருந்து வரும் வசந்த ராஜன் அவர்களுக்கு சீட் கொடுத்துள்ளது. இது எதிர்கட்சிகளுடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வசந்த ராஜனின் செயல்பாடுகள் மக்களிடம் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, கடந்த வருடம் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீர்வு வேண்டியும் போத்தனூர் ரயில் நிலையத்தை கோவையின் இரண்டாம் ரயில் முனையமாக உயர்த்த வேண்டியும் பொள்ளாச்சி வழி தடத்தில் பல்வேறு ரயில் சேவையை இயக்க வேண்டியும் இணை அமைச்சர் எல்.முருகனிடம் மனு அளித்தார்.

மேலும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின்  வளர்ச்சிக்காக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுடன் இணைந்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பொள்ளாச்சியில் இருந்து சென்னை, பொள்ளாச்சி முதல் கேரளா வரை உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தினார். மற்றும் மாவட்ட தலைவராக இருக்கும் வசந்த ராஜன் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு அரவணைப்பதில் பண்பாளராக இருந்துள்ளார் என்று அப்பகுதியை சேர்ந்த மக்களே தெரிவிக்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக வசந்த ராஜன் வார்டு வாரியாக மக்களுக்கு தேவையான அடிப்படைகளை செய்துள்ளார் என்றும் அங்கு நடக்கக்கூடிய மணல் கொள்ளை, கிராவல் கொள்ளையை எதிர்த்து அவர் நடத்திய மிக பெரிய போரட்டம் என்று மக்களுக்குகாக தன்னை  ஈடுபடுத்தியுள்ளார். இதற்கு கைமாறாக நிச்சயம் இந்த தேர்தலில் பொள்ளாச்சி மக்கள் வெற்றி வாய்ப்பை வசந்த ராஜனுக்கு தருவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், கோவையில் அண்ணாமலை அவர்கள் போட்டியிடுவதால் நிச்சயம் அதன் தாக்கம் பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய பகுதியில் பிரதிபலிக்கும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. மற்ற கட்சிகளை போல் பணம் இருந்தால் சீட் என்பது பாஜகவிடம் இல்லாமல் மக்களுக்காக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் தேடி வரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வசந்த ராஜனே என்பது குறிப்பிடத்தக்கது.