24 special

மன்சூர் அலிகான் பற்றிய ரகசியம் உடைக்கப்பட்டது...

MANSOOR ALIKHAN
MANSOOR ALIKHAN

தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் முக்கிய வில்லனாக பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர்தான் மன்சூர் அலிகான்! இவர் பல எதிர் கதாபாத்திரங்களையும் பல துணை கதாபாத்திரங்களையும் நடித்து வருகிறார். இதனை அடுத்து அரசியல் பக்கம் சற்று திரும்பிய மன்சூர் அலிகான் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்து 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய பொது தேர்தலில் புதிய தமிழகம் வேட்பாளராக போட்டியிட்டு அதில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தில் பிடித்தார். அதற்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு மாறிய மன்சூர் அலிகான் 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல்லில் போட்டியிட்டார், ஆனால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். 


இதற்கிடையில் எல்லாம் மன்சூர் அலிகான் என்றாலே சர்ச்சைகளை பேசுபவர் தேவையில்லாமல் பேசி விமர்சனத்திற்கு அவரே பலியாகி விடுவார் என்ற வகையிலான விமர்சனங்கள் அரசியல் வட்டாரம் மட்டும் என்று சினிமா வட்டாரத்திலும் பேசப்பட்டது.  இதனை அடுத்து சமீபத்தில் கூட த்ரிஷா குறித்த தவறான கருத்துக்களை முன்வைத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார் இதற்காக த்ரிஷா மட்டுமின்றி தமிழ் சினிமாவும் பல கண்டனங்களை மன்சூர் அலிகான் மீது முன் வைத்தது அதோடு த்ரிஷா இதில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்தார். இதற்குப் பிறகு தனது தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட மன்சூர் அலிகான் ஆரணியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். மேலும் அன்றாடம் பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பான அறிவிப்புகளை வெளியிட்டு வந்த மன்சூர் அலிகான் தேவையில்லாத பல சர்ச்சை கூறிய கருத்துக்களையும் பேசி விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். 

இதனை அடுத்து திடீரென்று சென்னை வளசரவாக்கத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு அதில் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகானை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசனும் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொழுது தேர்தல் நெருங்கும் போதெல்லாம் புதிய புதிய கட்சிகளை தொடங்கி பிறகு காணாமல் போகிறார் நாங்கள் தேர்தலுக்குப் பிறகும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம், யாரோ சொல்லும் தகவல்கள் எல்லாம் வைத்துக்கொண்டு தானாகவே அவர் முடிவு எடுக்கிறார் நிர்வாகிகளுடன் எந்த ஒரு முடிவு குறித்தும் ஆலோசிப்பதில்லை வாய்க்கு வந்ததை ஊடகங்களில் பேசி விடுகிறார் என்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவராக இருந்த மன்சூர் அலிகான் மீது பொதுச் செயலாளர் கண்ணதாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இந்த நிலையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தனியார் பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதிலும் மன்சூர் அலிகான் குறித்து பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது அவரது செயல்பாடுகள் மீதான அதிருப்தியும் நிர்வாகிகளுடன் அவருக்கு எந்த தொடர்பு இல்லாதவராகவே இருந்துள்ளார் என்பதே அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு முக்கிய காரணம்! தன் கட்சியின் யார் யார் உறுப்பினராக இருக்கிறார்கள் செயற்குழு உறுப்பினர் யார் என்பது கூட அவருக்கு தெரியாது அதனால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார். மேலும், நாங்கள் தமிழரசு கட்சி என்ற ஒரு பெயரில் இயங்கிக் கொண்டிருந்தோம் எங்களைக் கூப்பிட்டு நாமெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு வலிமையை அடைவோம் என்று கூறியிருந்தார், அந்த நம்பிக்கையில் தான் அவரது கட்சிக்குள் வந்தோம். 

ஆனால் ஆரம்பத்தில் அவர் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் அவரே மீறி செயல்பட்டது தான் மன உளைச்சலை ஏற்படுத்தியது.  இரண்டு நிமிடம் கூட மன்சூர் அலிகான் உடன் தொடர்ந்து பேசவே முடியாது,, அப்படி பேசினால் நிச்சயம் நமக்கு பைத்தியம் பிடித்து விடும்! மேலும் கட்சியை ஆரம்பிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் நாங்கள் தான் மேற்கொண்டோம் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை இவ்வளவு பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரால் சென்னையில் 100 ஓட்டர்ஸ் ஐடிகளை அவரால் பெற முடியவில்லை! என்று ஒரு தலைவர் என்ற தகுதியே மன்சூர் அலி கானிடம் இல்லை என்பதற்கான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இது தற்போது அரசியல் வட்டாரம் முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளது.