ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண் தான் ஆதரவு என்று பொதுவாக கூறப்படும் ஒரு வழக்கம் உள்ளது அதே சமயத்தில் இன்றைய காலத்தில் பெண்கள் படித்து முன்னேற வேண்டும் அதே சமயத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தேடி அலைந்து அவர்களை அங்கு சேர்த்து பயில வைக்கிறார்கள். இப்படி ஒரு பெண்ணிற்கு ஆதரவாக சமூகத்தில் இன்னொரு பெண் தான் இருக்க முடியும் என்ற ஒரு பிம்பம் இருந்து வந்தது தற்போது சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு வருகிறது! இன்றைய பதட்டமான சூழலில் யாரையும் நம்ப முடியாத ஒரு நிகழ்வுகள் நடந்து வருவது பலரையும், இந்த உலகத்தில் யாரையும் நம்ப கூடாது என்ற மனநிலைக்கு தள்ளி வருகிறது. அந்த வகையில் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பெண் பிள்ளைகளையும் பெண்களைப் பெற்ற பெற்றோர்களையும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான சம்பவம் நம் தமிழகத்திலேயே அரங்கேறி உள்ளது.
அதாவது விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த தேவாங்கர் கலை கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவியின் விவகாரத்தை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவர் ஒரு பெண் பேராசிரியராக இருந்த போதிலும் தன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போக்கில் சிலவற்றை செய்துள்ளார். தான் இப்படி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்துச் செல்வது குறித்து வெளியில் தெரியாது என்று சுதந்திரமாக தனது வேலையை செய்து வந்த நிர்மலா தேவிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போக்கில் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது, மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டுமென்று போராட்டங்களை நடத்தினர், அதோடு அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி பேராசிரியர் நிர்மலா தேவியுடன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனும் ஆராய்ச்சி மாணவர் கருப்பு சாமியும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணையில் கண்டறிந்து போலீசார் அவர்களையும் கைது செய்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போதைய தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐசியும் அன்றைய எஸ்.பி.யுமாக இருந்த ராஜேஸ்வரி இது குறித்த விசாரணையை மேற்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார். பிறகு இந்த வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது,. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும் கல்லூரி மாணவிகளிடமும் ரகசிய விசாரணையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இந்த விவகாரம் 2018 இல் இருந்து இன்று வரை இழுபறியிலும் பல சர்ச்சைகளையும் தாங்கி வருகிறது ஏனென்றால் இந்த விவகாரத்தில் அன்றைய ஆளுநர் பண்வாரிலால் புரோகிதத்திற்கு சம்பந்தம் இருப்பதாக நிர்மலா தேவி கூற அதற்கு பிறகு உயர் அதிகாரிக்கு பதிலாக அவரது பெயரை மாற்றி கூறினேன் என்ற வகையில் மறுப்பு தெரிவிக்க, பின்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தொடர்பான விவகாரமும் இதில் சம்பந்தப்பட்டு உச்சகட்ட குழப்பத்தில் தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடைபெற்றதை அடுத்து கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி இவ்வழக்கு குறித்த இறுதி கட்ட வாதங்கள் நடைபெற்று உள்ளது,. அதோடு வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்துள்ளார். எனவே கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தையும் தீர்ப்பையும் எட்ட உள்ளது பலரது கவனத்தை பெற்றுள்ளது.