இன்று உள்ள இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து முன்னேறுவதே அதிகமாக விரும்பி வருகின்றனர். அதற்காக பல ஐடியாக்கலையும் யோசித்து வைத்து வருகின்றனர். மேலும் சிலர் அவர்களாகவே பணம் சேர்த்து வைத்து அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து சுயமாக தொழில் தொடங்கி அவற்றை நன்றாக நடத்தி வருகின்றனர். மேலும் சில இளைஞர்கள் அவர்களின் நண்பர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து பிசினஸ் ஐடியாக்களை ஒன்றாக சேர்த்து தொழில்களை தொடங்குகின்றனர்.இவ்வாறு நண்பர்களாக இணைந்து தொழில் தொடங்கி நடத்தி வரும் கலர் பிசினஸ் என்ற அளவில் சூப்பராக ரன் ஆகி கொண்டு இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் அவர்கள் பிசினஸ் தொடங்கும் கதைகளை கேட்கும் பொழுது மிகவும் இன்ட்ரஸ்டிங்காகவும், மோட்டிவேஷனல் ஆகவும் பலருக்கும் இருப்பதை நம்மால் உணர முடியும்.
இது போலவே தற்பொழுது நண்பர்களாக இணைந்து பிசினஸ் ஒன்றை தொடங்கி அது சூப்பராக ரன் ஆகி இப்போது பல கிளைகளும் ஆரம்பித்து அதுவும் சூப்பராக சென்று கொண்டு இருக்கிறதாம்!! அவர்கள் ஆரம்பித்த பிசினஸ் என்ன?? மற்றும் எப்படி ஆரம்பித்தனர்?? என்பது குறித்து தற்போது அவர்களே பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர்!! அது குறித்து விரிவாக காணலாம்!!சென்னைக்கு எம் பி ஏ படிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து நண்பர்களாக ஐந்து பேர் வந்துள்ளனர். இவர்களும் இவர்களில் வகுப்பில் சேர்ந்து படித்த இளைஞர்களும் சேர்ந்து மொத்தம் எட்டு பேராக இணைந்து ஆரம்பித்த பிசினஸ் தான் ஆலம்பட்டியான் கருப்பட்டி காப்பி கடை!! இன்று இந்த ஆலம்பட்டியான் கருப்பட்டி காபி கடை அதிக அளவில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த அளவிற்கு ஒரு பிசினஸை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்பது இவர்கள் படிக்கும் பொழுதிலிருந்து இருந்து வந்த ஆசை என அந்த பேட்டியில் கூறியுள்ளனர்.
மேலும் இந்த கடைக்கு உள்ள கிளை ஒன்றில் தமிழிசை சௌந்தரராஜன் எப்போதுமே வந்து காபி கொடுத்துவிட்டு தான் செல்வாராம்!! மேலும் பல பிரபலங்களும் இந்த கடைக்கு சென்று கருப்பட்டி காபியை குடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் பதநீ சீசன் வந்துவிட்டால் அப்போது கிடைக்கும் கருப்பட்டிகளை எடுத்து சுரண்டையில் பெரிய gowdown ல் சேமித்து வைத்துக் கொள்வார்களாம். அதன் பிறகு அதை பிசினஸ்க்கு பயன்படுத்திக் கொள்வோம் என அந்த பேட்டியில் கூறியுள்ளனர். ஒரு நாளைக்கு என்று எடுத்துக் கொண்டாலே கிட்டத்தட்ட 50,000 வாடிக்கையாளர்கள் 43 கிளைகளுக்கு வந்து உணவு மற்றும் காபி போன்றவற்றை சாப்பிட்டு விட்டு செல்கின்றனர் என்று கூறியுள்ளனர். தேனி கம்பம் நாமக்கல் மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள மக்கள் சிறு தானியங்கள் எந்த மாதிரியான உணவுகளை செய்கின்றார்கள் என்பதை பார்த்து காத்துக் கொண்டதாகவும் கூறுகின்றர். முதலில் ஒரு டீ மட்டும் குடித்து வந்தவர்கள் தற்பொழுது 3 டீ வரைக்கும் குடிக்கும் நிலைமை மாறி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் பல offer வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளனர். இந்த அளவிற்கு அனைவருக்கும் நல்ல உணவு மற்றும் காப்பி போன்றவற்றை கொடுத்து வருவது மன நிறைவாக உள்ளது என கூறியுள்ளனர். மேலும் கருப்பட்டி தயாரிக்கும் போது குறிப்பிட்ட அளவிற்கு சுண்ணாம்பு மற்றும் பிற பொருள்களை சேர்த்து குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் தயாரித்தால் நல்ல மனம் உடையதாக இருக்கும் என்று அதற்கு ஏற்றது போலவே தயாரித்து வருவதாகவும் கூறுகின்றனர். தற்போது ஆலம்பட்டியான் கருப்பட்டி கடை இன்டர்நேஷனல் லெவலில் வரப்போவதாகவும் மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளனர்!! இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரும் கவனத்தையும் பெற்றவருகிறது!!