
கூட்டணி அரசு இல்லை கூட்டணி ஆட்சி தான் என எடப்பாடி பழனிசாமி கூற அதற்கு பாஜக மாநில தலைமை இது குறித்து அமிட்ஷா முடிவு எடுப்பார் என தெரிவித்த நிலையில் தற்போது புது மாற்றம் ஒன்று அறங்கேரி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்.10-ம் தேதி சென்னை வந்த அமித்ஷா, 11-ம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்புக்குப்பின், மாலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை’’ என்றார்.அந்த சந்தர்ப்பத்தில், கூட்டணிக்கு தலைமையேற்கும் பழனிசாமி , எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் மேடையில் இருந்தனர் இந்நிலையில், நேற்று காலை சட்டப்பேரவை கூட்டத்துக்கு வந்த பழனிசாமி, வெளிநடப்பு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கூட்டணி தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் விவாதத்தை உண்டாக்கியது.
சென்னையில் நடந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக - பாஜக கூட்டணி அரசு என்று சொன்னாரே என கேட்க அமிட்ஷா கூட்டணி அரசு என்று சொல்லவே இல்லை. நீங்கள் தவறாக புரிந்துகொண்டு ஏதேதோ வித்தையெல்லாம் காட்டுகிறீர்கள். தயவுசெய்து இந்த வித்தையெல்லாம் விட்டுவிடுங்கள். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்று தான் கூறினார்.அப்படியெல்லாம் அவர் சொல்லவே இல்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி என்றும், தமிழகத்துக்கு என்னுடைய பெயரை கூறினார். இதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழனிசாமியின் இந்த கருத்தால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.இதற்கிடையே, பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று தி.நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பழனிசாமியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இதுகுறித்து அமித் ஷா முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற இரண்டு முக்கிய விஷயங்களை மட்டுமே பாஜக டெல்லி தலைமை கணக்கில் கொண்டது ஒன்று திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறாமல் ஒன்று சேர்ப்பது இரண்டாவது தமிழகத்தில் அடுத்து அமையும் NDA அரசில் பங்கு பெறுவது இவற்றை கணக்கில் கொண்டே அமிட்ஷா நேரடியாக வந்து கூட்டணியை முடிவு செய்தார்.
இந்த நிலையில் பாஜகவின் கனவை சிதைக்கும் விதமாக EPS முதல் முறையாக பேட்டி கொடுத்தது பாஜக அதிமுக உறைவை சேர்ப்பதற்கு பதில் பிரிக்கவே செய்யும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உருவான போதே எடப்பாடி பழனிசாமி நிலையான மனதில் உள்ளதை வெளிப்படையாக கூற மாட்டார் அதிலும் கூட்டணி விஷயத்தில் அவர் எடுத்த முடிவுகள் பல நேரங்களில் மாறியுள்ளன எனவே இதிலும் அவர் உறுதியாக இருப்பாரா என கணக்கிட்டு கொள்ளுங்கள் என பேச தற்போது அதனை உறுதி படுத்தும் வகையில் எடப்பாடி பேச்சு மாறி இருப்பதாக டெல்லிக்கு மெசேஜ் சென்று இருக்கிறது மொத்தத்தில் இது களத்தில் புயலை கிளப்பி இருக்கிறது.