
“பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து ஆளுநருக்கும் அரசுக்கும் நடந்துவந்த போரானது உச்ச நீதிமன்ற தலையீட்டில்ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதை ஆளும் தரப்பு பெரிதாக கொண்டாடியது. குறிப்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை ரம்ஜான் கிருஸ்துமஸ் போன்று கொண்டாடியது திமுக தலைமை. மன்னிக்கவும் திமுக தலைமை தான் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்தும் சொல்லமாட்டார்கள் கொண்டாடமாட்டார்கள் இதனால் தான் தீபாவளி என சொல்லவில்லை. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் ஏப்ரல் 16-ம் தேதி நடந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ‘சமத்துவம்... சமூக நீதி...’ என அட்வைஸ் மழையைப் பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
‘கடந்தகாலத்தில் எதிராகச் செயல்பட்ட துணைவேந்தர்களையும், பதிவாளர்களையும் எச்சரிக்கும்விதமாகவும், அரசு தனது அதிகாரத்தைக் காட்டும் விதமாகவும்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். அதோடு, காலியாக இருக்கும் ஆறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிகளை நிரப்பவும் உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர். ஆனால், அதற்குள் துணைவேந்தர் பதவியைக் கோடிகளில் ஏலம்போடத் தயாராகிவிட்டது என்ற தகவல்கள் அரசல் புரசலாக வெளியாகி உள்ளது. அதற்கெனவே இருக்கும் மாஃபியா கும்பல். எனவே ‘சமத்துவம்... சமூக நீதி...’ எனப் பேச்சோடு நிற்காமல், துணைவேந்தர் பதவிகள் நியாயமான முறையில் நிரப்பப்படுவதை முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும்’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.”
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்?. நாட்டில் என்ன நடக்கிறது?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவர் நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் ஆகியுள்ளது. இது நீதித்துறைக்கு இது 24x7 ஆக கிடைக்கிறது.
அரசமைப்பின் 145ஆவது பிரிவை (முழுமையான நீதியை உறுதி செய்யும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம்) விளக்குவதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. அரசமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இவ்வாறு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசுக்கும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே, குடியரசு துணைத் தலைவரின் கருத்து அமைந்திருந்தது.இதனால் நிலைகுலைந்துபோன முதலமைச்சர் ஸ்டாலின், 'யாரும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது. ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளால் அரசுகள் நடத்தப்பட வேண்டும்' என கூறியிருக்கிறார்.
இதைத்தான் குடியரசு துணைத் தலைவரும் கூறியிருக்கிறார். ஸ்டாலின் தனது கருத்தை திரும்ப படித்துப் பார்க்க வேண்டும். "யாரும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க கூடாது" என்பதுதான் பாஜகவின் கருத்தும்.முதலமைச்சர் ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தையும், டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பையும், உண்மையிலேயே மதிப்பவராக இருந்தால், அரசியல் சட்டத்தில் உள்ள, உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். தங்களுக்கு உடன்பாடாக இல்லையெனில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், அரசியல் சட்டத்தையும் துச்சமென மதிப்பவர்கள், இப்போது அரசியல் சட்டத்தை மதிப்பது போல நடிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். விரைவில் இட ஒதுக்கீடு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்பதால் அழுது புலம்ப துவங்கி உள்ளார் முதன்மையானவர்