Politics

உடைந்ததா திமுக... அமைச்சர் நேரு விவகாரத்தால் மொத்தமாக விழுந்த ஆப்பு.... கதறும் சீனியர்ஸ்...

knnehru
knnehru

திமுகவைப் பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது வழக்கம்தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அமைச்சர் அல்லது மாவட்ட செயலாளரின் ஆதிக்கம் இருக்கும்.உதாரணத்திற்கு விழுப்புரம் பொன்முடி, திருச்சி கேஎன் நேரு, திருவண்ணாமலை எவ வேலு, திண்டுக்கல் ஐ பெரியசாமி என பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பல மூத்த முன்னாள் அமைச்சர்களே உதயநிதியை தற்போதைய முதல்வராக ஏற்றுக் கொண்டது போல் தான் பேசி வருகிறார்கள்.


இந்த நிலையில் உதயநிதி ஆதரவாளர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு நெருக்கமான சில அமைச்சர்கள், சீனியர் அமைச்சர்களை ஓரம் கட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேஎன் நேரு தொடர்ந்து கட்சியில் ஓரம் கட்டுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திருச்சியை பொறுத்தவரை கேஎன் நேரு ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் திமுக மாவட்ட 3ஆக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கேஎன் நேரு மாநில பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் அவரது மகன் அருண் நேரு ஆகியோர் வீட்டில்  திடீர் சோதனை நடத்தினர். 

இதற்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது திமுக கடும் எதிர் வினையாற்றியது. பல முக்கிய நிர்வாகிகள் சோதனை நடந்த போதே செந்தில் பாலாஜியின் வீட்டுக்குச் சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபின் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பார்த்தார். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட போதும் திமுக தான் வழக்கு தொடர்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை பார்த்துக் கொண்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு கொடுத்த முக்கியத்தை, மிக மூத்த சீனியரான கேஎன் நேருவுக்கு கொடுக்கவில்லை என பொங்குகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அமலாக்கத்துறை நேருவை குறி வைத்து சோதனை நடத்திய நிலையில் திமுக தலைமை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மேலும் எல்லாவற்றிற்கும் பேட்டி கொடுக்கும் சட்ட அமைச்சர் ரகுபதியும், அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது அவரது ஆதரவாளர்கள் தலையில் இடியை இறக்கியது போல ஆகிவிட்டது.

இந்த நிலையில் தற்போது திருச்சி சிவாவுக்கு திமுக துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருப்பது கே.என்.நேருவின் ஆதரவாளர்களை மீண்டும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே மிகவும் இளையவரான அன்பில் மகேசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதோடு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமை கழகப் பதவி என்பதால் கேஎன் நேருவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியிலிருந்த நிலையில் அதற்கும் ஆப்பு வைப்பது போல திருச்சி சிவாவுக்கும் துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

சைவ வைணவம் குறித்து அவதூறாகவும் பெண்கள் குறித்து ஆபாசமாகவும் பேசியதாக அமைச்சர் பொன்முடியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவா எம்பி-க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் சீனியர்களின் ஒருவரான கேஎன் நேருவை ஓரம் கட்டும் வகையிலேயே திருச்சி சிவாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக கிசுகிசுக்கின்றனர்.

செந்தில் பாலாஜி வீட்டில் ஈடி சோதனயின் போது பொங்கிய திமுக, நேரு விவகாரத்தில் மவுனம் காப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர் திருச்சி மாவட்ட உடன்பிறப்புகள்..மேலும் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை  ரெய்டு விஷயத்திலும் திமுக மௌனத்தைதான் பரிசாக தந்தனர் . முப்பெரும் துறை அமைச்சராக இருந்த பெரியசாமியின் அமைச்சர் பதவி மாற்றப்பட்டது  உதயநிதி ஸ்டாலின் முப்பெரும் துறை அமைச்சராகி இருக்கிறார். இவ்வாறு திமுக சீனியர்ஸ்  தலைமையின் மீது கடுப்பில் உள்ளதால் எந்த நேரத்திலும்  என்னவேண்டுமானாலும்  நடக்கலாம் என்கிறார்கள்