தமிழக பாஜகவினரின் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறி வருவதுடன் வரலாற்றில் பாஜகவின் மாநில தலைவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு இருப்பதும், சென்னை முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மப்டியில் சுற்றி வருவதும் பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
அதே நேரத்தில் கோட்டை நோக்கி வரும் பாஜகவினரை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர், ஒரு கட்டத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவர் உடன் சென்ற பாஜகவினரை தடுக்க வழிகள் மறைக்கப்பட்டது, இதனால் சென்னையே போர்க்களமாக மாறி இருக்கிறது, இது வரை பாஜகவில் இப்படி ஒரு இளைஞர் பட்டாளத்தை பார்த்தது இல்லை என்று காவல்துறையினரே வியப்படையும் வண்ணம் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசு குறைக்கவில்லை என்றால் 10 லட்சம் நபர்களை திரட்டி திருச்சியில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும் எனவும், இது வெறும் பேச்சு அல்ல செய்து காட்டுவோம் எனவும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார், இரண்டு ஆண்டுகள் அனைத்திற்கும் பாஜகவினர் தயாராக இருக்க வேண்டும் எனவும் கைது உட்பட எதற்கும் பாஜகவினர் தயாராக இருக்க அண்ணாமலை அக்கட்சியினருக்கு தெரிவித்து இருக்கிறார்.
அதோடு நில்லாமல் இன்னும் இரண்டு ஆண்டுகள் திமுகவும் அனைத்திற்கும் தயாராக இருக்குமாறும் அண்ணாமலை தெரிவித்து இருப்பது அமைச்சர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது, 4 நாளில் அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக கூறி இருப்பதால் யார் அந்த இருவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழலில் கோட்டை நோக்கி சென்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதால் பெரும் பதற்றம் உண்டாகி இருக்கிறது, மேலும் விரைவில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாஜகவினர் கைது செய்யபடலாம் என்று காவல்துறை முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த தகவல்களுக்கு TNNEWS24 உடன் இணைந்து இருக்கவும்.